ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக வெளி வந்துள்ள மாருதி நிறுவன புதிய கார்

Maruti Suzuki Baleno Limited Edition Launched

மாருதி சூசுகி பலேனோ லிமிடெட் எடிசன் காரின் கேபின்களில், டூயல் டோன் சீட் கவர்கள், ஸ்மார்ட் கீ ஃபைண்டர், குஷன் மற்றும் இலுமினேட்டட் ஸ்காப் பிளேட்களும் இடம் பெற்றுள்ளது.

சிறப்பு எடிசன் ஸ்விஃப்ட் ஹாட்பேக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த நாளிலேயே மாருதி நிறுவனம் தனது புதிய லிமிடெட் எடிசன் பலேனோ ஹாட்பேக்கை, விழாகாலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. இது மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் இக்னிஸ் கார்களை தொடர்ந்து மூன்றாவது லிமிடெட் எடிசன் கார்களாக வெளி வந்துள்ளது. புதிய லிமிடெட் எடிசன் பலேனோ கார்களின் விலை, ஸ்டாண்டர்ட் மாடல்களை விட 35,000 ரூபாய் அதிகமாகும்.

You May Like:விழாகால சீசனுக்காக மாருதி நிறுவனத்தின் புதிய கார் அறிமுகம், விலை ரூ. 4.99 லட்சம்

லிமிடெட் எடிசன் பலேனோ கார்களில் சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் கிரே பாடி கிட்களுடன் முன்புறம், ரியர் மற்றும் சைடு ஸ்டிரிக்ஸ்களுடன் சைடு பாடி மாடுலிங்க் செய்யப்பட்டுள்ளது. உட்புற கேபின்களில், இந்த காரில் டூயல் டோன் சீட் கவர்கள், ஸ்மார்ட் கீ பைண்டர், குஷன் மற்றும் இலுமினேட்டட் ஸ்காப் பிளேட்களும் இடம் பெற்றுள்ளது.
Maruti Suzuki Baleno Price

You May Like:இந்திய மார்க்கெட்டில் பயன்படுத்தப்பட்ட பைக்களுக்கான பிரிவில் நுழைகிறது ஹார்லி டேவிட்சன்

இந்த காரில் எந்தவிதமான மெக்கனிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த கார்களிலும் ஒரே மாதிரியான இன்ஜின் ஆப்சன்களுடன், அதாவது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என 2 வகைகளில் வெளியாகியுள்ளது. இந்த இன்ஜின்களில் 5-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்கள் ஆப்சன்களாக கிடைக்கிறது.

You May Like:நியூ-ஜென் போர்ச் காயென்னே கார்கள் அறிமுகம்; விலை ரூ.1.19 கோடி

இந்திய கார் மார்கெட்டில், மாருதி சூசுகி பலேனோ கார்கள், ஹூண்டாய் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.Maruti Suzuki Baleno Limited Edition Rear