5 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்த மாருதி சுசூகி பலேனோ

Maruti Suzuki Baleno

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி பலேனோ கார்கள், 90 சதவிகிதம் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட கார் என்பதுடன், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் சுசூகி காராகவும் இருந்து வருகிறது.

மாருதி சுசூகி நிறுவனம் நெக்சா சேனல் டீலர்ஷிப் உடன் இணைத்து மாருதி சுசூகி பலேனோ கார்கள் விற்பனையில் வெற்றிகராமாக 5 லட்சம் மைல்கல்லை கடந்துள்ளது.

Maruti Suzuki Baleno Front View

You May Like:வெளியிடப்பட்டது ஆடி இ-டிரான் ஜி.டி. கான்செப்ட்; தயாரிப்பு 2020ல் தொடங்கும் என அறிவிப்பு

இந்த சாதனை மாருதி சுசூகி பலேனோ அறிமுகம் செய்யப்பட்ட 38 மாதங்களில் ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தியாவில் வேகமாக அரை மில்லியன் விற்பனை இலக்கை எட்டிய கார் என்ற பெருமையை மாருதி சுசூகி பலேனோ கார் பெற்றுள்ளது. பிரிமியம் ஹாட்ச்பேக் காரான இந்த கார், ஹூண்டாய் i20 கார்களுக்கு போட்டியாக இருந்து வருகிறது.

Maruti Suzuki Baleno Steering

You May Like:இந்தியாவில் தொடங்கியது புதிய தலைமுறை போர்ச்சே கார்களுக்கான புக்கிங்

கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாருதி சுசூகி பலேனோ கார்கள் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்கள் நெக்சா டீலர்ஷிப்களில், மாருதி சுசூகி எஸ்-கிராஸ் கார்களுக்கு அடுத்தபடியாக விற்பனை செய்யப்பட்டது. இந்திய மக்களுக்கு தேவையான வசதிகளை சரியாக அளவில் கலந்து உருவாக்கப்பட்டதுடன் பழைய பிராண்டுடன் புதிய டிசைன் வேலைப்பாடுகளுடன் இணைந்து இந்த கார்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Baleno Dashboard

You May Like:மல்டிபிள் டிரைவிங் மோடுகளுடன் வெளியாகிறது புதிய டாட்டா ஹாரியர்

இந்த கார்கள், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்சன்களில் விற்பனை செய்யப்பட்டன. இத்துடன் 1.0L பூட்டர்ஜெட் இன்ஜின் உடன் கூடிய மாருதி சுசூகி பலேனோ RS கார்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

Maruti Suzuki Baleno details

You May Like:90 நாட்கள் வெயிட்டிங் பிரீயட்-ல் விற்பனையாகிறது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி பலேனோ கார்கள், சதவிகிதம் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட கார் என்பதுடன், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் சுசூகி காராகவும் இருந்து வருகிறது. மேலும் இந்த கார்களில் பாதுகாப்பு வசதிகளாக, டூயல் ஏர்பேக்ஸ் மற்றும் ABS வழக்கம் போல இடம் பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி இந்த கார்கள் ஆஸ்திரேலியா, லத்தின் அமெரிக்கா மற்றும் மற்ற ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Maruti Suzuki Baleno Sideview

You May Like:2 மில்லியன் மைல்கல்லை எட்டிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனை

மாருதி சுசூகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் & சேல்ஸ் பிரிவு எக்சிகியூட்டிவ் டைரக்டர் ஆர்.எஸ் கைலாஸ், இந்த நிதியாண்டில் மாருதி சுசூகி பலேனோ கார்கள் விற்பனை 20.6 சதவிகிதம் உயர்ந்து உள்ளதை உறுதிபடுத்தியுள்ளார். மேலும், இந்த கார் 2016 முதல் அதிக விற்பனையாகும் கார்கள் பட்டியலில் ஒன்றாக இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவே பலேனோ கார்கள் இந்தியாவில் மிகவும் விரும்பும் பிரிமியம் ஹாட்ச்பேக் கார்களாக இருந்து வருகிறது என்றார். மாருதி சுசூகி பலேனோ கார்கள் CVT கியர்பாக்ஸ் உடன் பெட்ரோல் வகை காராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Maruti Suzuki Baleno Rear

You May Like:வெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக்