2018 மாருதி சுஸுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் ரிவ்யூ

Maruti Ciaz Car News in Tamil

மாருதி சுசூகி நிறுவனம் தனது புதிய கார்-ஆன சியஸ் கார்களை அறிமுகம் செய்துள்ளது. பழைய கார்களுடன், இந்த புதிய காரை ஒப்பிட்டு பார்க்க இதுவே சரியான நேரமாக இருக்கும். ஆகையால் இந்த காரில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது? இதுபற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

Maruti Ciaz Review

வெளிப்புற தோற்றம்

புதிய சியஸ் கார்களின் ஸ்டைலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம். புதிய சியஸ் காரின் முன்பகுதி ஆச்சரியபடுத்தும் வகையிலும், ஆடம்பரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார்களில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம். இந்த புதிய காரில் கிரில் மற்றும் குரோம் உடன் கொண்ட பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. LED ஆட்டோ புரொஜக்டர் ஹெட்லைட்களுடன் DRLகள் மற்றும் LED பனிகால விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. புதிய 16 இன்ச் அலாய் இவற்றுடன் கிரே பினிஷ் ஆகியவை மாற்றங்களில் முக்கியமானதாக இருந்து வருகிறது. ரியர்-ஐ பொறுத்தவரை, இரண்டு கார்களும் ஒரே மாதிரியாகவே உள்ளன. ஒரே ஒரு மாற்றமாக புதிய காரில், புதிய LED டெயில்லேம்ப் மற்றும் மாற்றங்களுடன் கூடிய பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Maruti Ciaz Dashboard

உட்புற வடிவமைப்பு மற்றும் வசதிகள்

காரின் அடிப்டையான டிசைனில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், முதலில் புதிய காரின் உட்புற வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதே உண்மை. பின்னர், புதிய காரின் உட்புறத்தில் மென்மையான கலரில் உட் கிரேன் அசென்ட்களுடன் கிளாஸி டெக்ஸ்ட்ஷர்கள் மின்னி கொண்டிருகின்றன. டாஷ்-ல் குரோம் சேர்க்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெரிய மாற்றமாக புதிய 4.2 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, எக்கோ இண்டிக்கேட்டர், இது டிரைவிங் முறைக்கு ஏற்றவாறு கலரில் மாற்ற செய்யப்பட்டிருக்கும்.

Maruti Ciaz Seating

காரில் இடம் பெற்றுள்ள வசதிகளை பார்க்கும் போது, இதில் குரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஹெட்லைட்கள், ஏற்கனவே இருந்த ஸ்மார்ட் பிளே இன்போடேயன்மென்ட் சிஸ்டம், இத்துடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ரியர் காமிரா டிஸ்பிளே ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பை பொருத்தவரை ஹை-ஸ்பீட் அலர்ட், டுயல் ஏர்பேக்ஸ் போன்றவை வழக்கம் போலவே இடம் பெறும். ESP மற்றும் Isofix போன்றவைகளும் உள்ளன. கார்களில் இட வசதி என்பது, வலுவான காரணமாக இருந்து வருகிறது. கால் வைக்க அதிகளவு இடம் மற்றும் தலையை வைத்து கொள்ள இட வசதி ஆகியவற்றுடன் இடவசதியை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Maruti Ciaz SHVS Engine

இன்ஜின்கள்

1.3 டீசல் உடன் SHVS டெக்னாலஜியுடன் வழக்கமாக மைலேஜ் ஆக லிட்டர் ஒன்றுக்கு 28.09 கிலோ மீட்டர் கொடுக்கும். பழைய பெட்ரோல் 1.4லிட்டர் மாற்றப்பட்டு 1.5 லிட்டர் யூனிட்டாக மாற்றப்பட்டு விட்டது. புதிய பெட்ரோல் இன்ஜின்கள் 104bhp மற்றும் 138Nm கொண்டதாகவும், கூடுதலாக, எரிபொருளை சேமிக்கும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. முதல் ஸ்மார்ட் ஹைபிரிட் பெட்ரோல் செடான்களை போன்று டப் செய்யப்பட்டுள்ள புதிய சியஸ் கார்களில், புதிதாக, டுயல் பேட்டரி சிஸ்டம் இடம் பெற்றுள்ளது. இதில் ஸ்டார்ட்/ஸ்டாப் பங்க்ஷன், பிரேக் ரீஜெனரேசன் மற்றும் டார்க்யூ அசிஸ்ட் பங்க்ஷன் ஆகியவையும் உள்ளது. பெட்ரோல் மெனுவல் லிட்டர் ஒன்றுக்கு 21.5 கிலோ மீட்டர் கொடுக்கும் வகையிலும், 4-ஸ்பீட் ஆட்டோ வைப்ரன்ட்கள், ஹில் ஹோல்ட் பங்க்ஷன் உடனும் கிடைக்கிறது.

Maruti Ciaz First Review

விலை

பெட்ரோல் வகை கார்களின் விலை 8.2 லட்ச ரூபாய் முதல் தொடங்கி, டாப்-என்ட் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ஆல்பா கார்கள் 10.9 லட்ச ரூபாய் விலையில் விற்பனையாகிறது. ஆல்பா பெட்ரோல் மெனுவல் காரின் விலை 9.9 லட்ச ரூபாய் விலையிலும், டீசல் மாடல்கள் 9.2 லட்ச ரூபாயிலும் கிடைகிறது. இதில் டாப்-என்ட் மாடலான மெனுவல் கார்கள் 10.9 லட்ச ரூபாய் விலையில் விற்பனையாகிறது. பழையது மற்றும் புதிய சியஸ் கார்களின் விலையில் 35-50 ஆயிரம் ரூபாய் அதிகமாகவே இருக்கும் உண்மையான மாற்றம் என்றால், புதிய பெட்ரோல் இன்ஜின்கள், மேம்படுத்தப்பட்டதோடு, தகுதி வாய்ந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே நல்ல மதிப்பை பெற்றுள்ள சியஸ் கார்கள் தற்போது மேலும் சிறப்படைந்து உள்ளது.