2018 மாருதி சுசூகி சியஸ் ரூ. 8.19 லட்ச விலையில் அறிமுகமானது

2018 Maruti Suzuki Ciaz Facelift Car News in Tamil

மாருதி சுசூகி நிறுவனம் தனது புதிய சியஸ் கார்களை அறிமுகம் செய்துள்ளது. சியஸ் பேஸ்லிப்ட் மெனுவல் பெட்ரோல் கார்களின் விலை 8.19 லட்சம் ரூபாய் முதல் 9.97 லட்சம் ரூபாய் வரையிலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார்களின் விலை 9.8 லட்சம் ரூபாய் முதல் 10.97 லட்சம் ரூபாய் விலையிலும், டீசல் கார்களின் விலை 9.19 லட்சம் ரூபாய் முதல் 10.97 லட்சம் ரூபாய் விலையிலும் (இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்) கிடைக்கிறது. பெட்ரோல் இன்ஜின் ஆப்சன்ல்களில் புதிய K15 1.5 லிட்டர் மோட்டாருடன் கிடைக்கிறது.

Maruti Suzuki Dashboard

இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதலே, முதல் ஜெனரேசன் சியஸ் கார்கள், சுசூகி ஷோருமை விட்டு வெளியே செல்ல தொடங்கியுள்ளன. இந்த காரில் செய்யப்பட்டுள்ள வசதிகள் இதை பிரிமியம் காராகவும், உயர்ந்த ஸ்பெக் கொண்ட காராகவும் மாற்றியுள்ளதால், மார்க்கெட்டில் இதற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

Maruti Suzuki Ciaz Facelift 2018

சியஸ் கார்களில் புதிதாக 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் K15 போன்று, K-சீரிஸ் இன்ஜின்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினின் ஆற்றல் மட்டுமின்றி, எரிபொருள் சிக்கனமும் கொண்டுள்ளதாக இருக்கிறது. இதற்காக மேம்படுத்தப்பட்ட லேசான ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் ரீஜெனரேடிவ் பிரேக்கிங் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் ஆப்சன்ல், 1.3 லிட்டர் DDiS 4-சிலிண்டர் ஆயிலர் ஆகியவற்றை கொண்டுள்ளது. இவை சாலையில் செல்லும் போது 90PS மற்றும் 200Nm டார்க்யூ-வை, 5-ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷனுடன் செல்லும்.

2018 Maruti Suzuki Ciaz Facelift Car News

காரின் டிசைனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காரின் பிராண்ட் எண்டில் ரெட்ஒன் மற்றும் மாற்றியமைகப்பட்ட ஹெட்லைட் யூனிட் LED ஹெட்லைட் (இது ஆட்டோமேட்டிக் மற்றும் ஆட்டோ லெவல் பங்கசன்களை) கொண்டதாக இருக்கும். இது மட்டுமின்றி பகலில் எரியும் லைட்கள். கிரில் டிசைனுடன் கூடி ஹெட்லைட் உள்ளன. பம்பரின் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் கேபினில் புதிய மரத்தாலான டிரிம் மற்றும் மல்ட்டி இன்போ டிஸ்பிளே இது 4.2 இன்ச் அளவு கொண்டது.

2018 Maruti Suzuki Ciaz Rearlight

பாதுகாப்பை பொறுத்தவரையில் டுயல் ஏர்பேக்ஸ், ABS மற்றும் Isofix குழந்தைகள் இருக்கைக்கான வடிவமைப்பு போன்றவை வழக்கம் போலவே இடம் பெற்றுள்ளது. இத்துடன் ஸ்பீட் லிமிட் வார்னிங் மற்றும் பிரான்ட் சீட்டில் அமர்பவர்களுக்கு சீட் பெட்ல்ட் ரீமைண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் ESP மற்றும் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார்களில் ஹில் ஹோல்ட் அசிஸ்ட்டும் இடம் பெற்றுள்ளது.