அறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்

Maruti Suzuki Wagon R

மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களுக்கு இரண்டு ஆப்சன்ல் பேக்கேஜ்களுடன் வெளி வர உள்ளது.

விழாகால சீசனை முன்னிட்டு மாருதி சுஸுகி நிறுவனம், உதிரி பாகங்களுடன் கூடிய வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களில் மெக்கானிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தபோதும் உதிரிபாகங்கள் கிட்களுடன் உடன் வெளிவந்துள்ளது இந்த காரின் வெளிப்புற தோற்றத்தை மேலும் அழகு படுத்தியுள்ளது.

You May Like:ரூ. 37.50 லட்ச விலையில் அறிமுகமானது 2018 பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I

காரின் வெளிப்புறத்தை பொறுத்தவரை, மாருதி நிறுவனம், காரின் இரு புறங்களிலும் கிராப்பிக்ஸ்களை கொண்டு அழகுபடுத்தியுள்ளது. மேலும், காரின் ரியர் பகுதியில் ஸ்பாயிலர் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களின் கேபின்களின் 2 டின் ஆடியோ சிஸ்டம், உட் டிரிம் சென்ரல் கன்சோல் மற்றும் பவர் விண்டோ சுவிட்ச் கன்சோல் மற்றும் லெதர் கொண்டு கவர் செய்யப்பட்ட சீட் கவர்களுடன் கூடிய குஷன் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்கள் LXI, VXI மற்றும் VXI+ வகைகளுடன் இரண்டு பேக்கேஜ் ஆப்சன்களுடன் வெளி வந்துள்ளது. இந்த இரண்டு ஆப்சன்கள் முறையே 15 ஆயிரத்து 490 மற்றும் 25 ஆயிரத்து 490 விலைகளில் கிடைக்கிறது. மேலும், LXI, VXI மற்றும் VXI+ வகைகள் முறையே 4.19 லட்ச ரூபாய் விலையிலும், 4.45 லட்சம் மற்றும் 4.73 லட்ச ரூபாய் விலையிலும் விற்பனை வந்துள்ளது (அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலை, டெல்லியில்)

You May Like:ரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS

மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களை அறிமுகம் செய்த பின்னர், மாருதி சுசூகி இந்தியா நிறுவன சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு, மூத்த நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். கால்சி தெரிவிக்கையில், “வேகன்ஆர் வாடிக்கையாளர்கள் எப்போதும் புதிய ஸ்டைல்களை கொண்டுள்ளது. லிமிடெட் எடிசன் கார்களை நாங்கள் இந்த விழாக்காலத்தை மேலும் அழக்காக அறிமுகம் செய்துள்ளோம். இந்த காரின் உயரமான டிசைன், டிரைவிங் கம்போர்ட், அதிக இட வசதி கொண்ட இன்டீரியர்கள் மற்றும் எரிபொருள் திறன் கொண்டிருப்பதால், வேகன்ஆர் கார்கள், மாருதி நிறுவனத்தின் அதிகளவு விற்பனையாகும் கார்களாக இருந்து வருகிறது. வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்கள் இந்தியாவில் புதிய உணர்வை தோற்றுவிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்” என்றார்.
Maruti Suzuki Wagon R Exterior

You May Like:ரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு

மாருதி சுசூகி நிறுவனத்தின் வேகன்ஆர் கார்கள் நிறுவனத்தின் அதிக விற்பனையாக மாடலாக இருந்து வருகிறது. இந்தாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மாருதி நிறுவனம் 85 ஆயிரம் வேகன்ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தாண்டு விழாகால சீசனை மிகிழ்விக்க புதிய உதிரி பாகங்களுடன் கூடிய கிட்களுடன் வெளியாகியுள்ளது.

வேகன்ஆர் கார்கள், 998cc, 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் இதன் மூலம் 68bhp மற்றும் 90Nm பீக் டார்க்யூவை கொண்டுள்ளது. இதே இன்ஜின் CNG டெவலப்களுடன் 59bhp மற்றும் 70Nm பீக் டார்க்யூவில் இயங்கும். இந்த இன்ஜின் 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ்களுடன் வழக்கமான 5-ஸ்பீட் AMT கியர்பாக்ஸ் உயர் தரம் கொண்ட ஸ்பெசிபிகேஷன் கொண்ட VXI மற்றும் VXI+ பெட்ரோல் வகைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

[the_ad_placement id="left-article"]
[the_ad_placement id="left-article"]