2 மில்லியன் மைல்கல்லை எட்டிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனை

Maruti Suzuki Swift

கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை 2 மில்லியன் மைல்கல்லை எட்டியுள்ளதாக மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் ஆச்சரியபட வைக்கும் விஷயம் என்னவென்றால், மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை அரை மில்லியனை எட்ட ஐந்து ஆண்டுகள் எடுத்து கொண்டது. அடுத்த அரை மில்லியன் யூனிட்கள் மூன்று ஆண்டுகளை விற்பனையானது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே இந்த கார்கள் அரை மில்லியன் சேல்ஸ் மார்க்கை கடந்தது.

Maruti Suzuki Front

You May Like:வெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக்

இந்தாண்டு முற்பகுதியில் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்கள், பல்வேறு டிசைன் மற்றும் வசதிகளுடன் மூன்றாம் தலைமுறைக்கான கார்கள் பிரிவில் நுழைந்தது. புதிய மாடல்கள் 5-வது தலைமுறை HEARTECT பிளாட்பார்மில், அதிக உறுதி, பாதுகாப்பு மற்றும் பெட்ரோல் குறைவாக செலவிடும் வகையில் உருவாக்கப்பட்டது.

புதிய கட்டமைப்புகளும் கூடுதலாக இந்த கார்களின் ஒட்டுமொத்த திறன் மற்றும் டிரைவிங் டைனமிக்ஸ்-ஐ அதிகரித்தது. புதிய மாருதி ஸ்விஃப்ட் 2018 கார்கள், அறிமுகமாகி 10 வாரங்களில் அதிவேகமாக 1 லட்சம் புக்கிங் பெற்று புதிய சாதனை படைத்தது.

maruti suzuki india ltd

You May Like:‘திரிலிங் ரைடு’ அனுபவத்தை அளிக்கும் கேடிஎம் 125 டியூக் அறிமுகமானது; விலை ரூ. 1.18 லட்சம்

2018-19ம் ஆண்டின் ஏப்ரல் – அக்டோபர் மாட்டில் இந்தோ-ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனம் தனது ஸ்விஃப்ட் கார்களுக்கான தயாரிப்பை 45% அதிகரித்து 1.39 யூனிட்களாக உயர்த்தியது. இந்த கார்கள் AMT வகைகளுடன் சுசூகி ஸ்விஃப்ட் மொத்த விற்பனையில் 20%-மாக இருந்தது. இந்நிலையில், சுசூகி ஸ்விஃப்ட் (குளோபல்-ஸ்பெக்) கார், ஜப்பான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் புரோமஷன் 2017ம் ஆண்டில் வழங்கிய குட் டிசைன் அவார்ட்டை வென்றது. இதுமட்டுமின்றி “வேர்ல்ட் அர்பன் கார் ஆஃப் தி இயர் 2018” விருதுகளில் இந்த கார்கள் இறுதி சுற்றில் இடம் பிடித்த மூன்று கார்களில் ஒன்றாக இருந்தது.

விற்பனையில் படைக்கப்பட்ட புதிய சாதனை குறித்து பேசிய மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டைரக்டர் ஆர். எஸ். கைலாஷ், ஸ்விஃப்ட் இரண்டு மில்லியன் யூனிட்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளதால் எங்கள் நிறுவனம் பெருமை கொள்கிறது.

swift hatchback

You May Like:ரூ. 7.44 லட்ச ரூபாயில் அறிமுகமானது புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா

பத்தாண்டுகளுக்கு மேலாக ஸ்விஃப்ட் பிராண்ட் கார்கள் அதிகளவில் விற்பனையாகும் டாப் 5 கார்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தற்போது விற்பனையில் எட்டப்பட்டுள்ள சாதனை, வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனத்தின் மீது வைத்துள்ள உண்மையான நம்பிக்கையை காட்டுகிறது.

Maruti Suzuki Swift Rear

You May Like:இந்தியாவில் அறிமுகமானது 2018 மஹிந்திரா அல்ட்ராஸ் ஜி4; விலை ரூ. 26.95 லட்சம்

இந்த வெற்றிக்கு ஸ்விஃப்ட் கார்களின் டைனாமிக் திறன், நவீன டிசைன் மற்றும் தொழில்நுட்பம், வளைந்து கொடுக்கும் தன்மை, நீடித்து நிலைக்கும் தன்மை போன்றவைகளுடன், குறைவாக பெட்ரோல் செலவிடும் திறனுமே காரணம். இதே சேவையை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்வோம்” என்றார்.