விழாகால சீசனுக்காக மாருதி நிறுவனத்தின் புதிய கார் அறிமுகம், விலை ரூ. 4.99 லட்சம்

maruti-swift-limited-edition-launched

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்கள் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்வரும் விழாக்கால சீசனை முன்னிட்டு, தனது முதல் சிறப்பு எடிசன் கார்களை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த லிமிடெட் எடிசன் கார்களின் விலை 4,49 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்). இந்த கார்கள் LXi மற்றும் LDi வகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சிறப்பு எடிசன் வெர்சன்களில், புதிய வசதிகளாக ஹாட்ச் பேக்களுடன் கூடிய பேஸ் டிரிம் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை பொருத்தியதற்காக எந்த வகையான கூடுதல் கட்டணமும் காரின் விலையில் அறிவிக்கப்படவில்லை. புதிய லிமிடெட் எடிசன் ஸ்விஃப்ட் கார்கள், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இக்னிஸ் கார்களுடன் இணைந்து இந்த விழாகாலத்தில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Maruti Suzuki Swift Limited Edition

You May Like:நியூ-ஜென் போர்ச் காயென்னே கார்கள் அறிமுகம்; விலை ரூ.1.19 கோடி

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன்களில், சிங்கள் – DIN ப்ளு நிறத்திலான ப்ளுடூத் ஸ்டிரியோ, இத்துடன் இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் பிளாக் நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்ட வீல்கவர்களும் உள்ளன. கூடுதலாக ஸ்விஃப்ட் L டிரிம்களில், பிராண்ட் பவர் விண்டோகள், ABS, டூயல் பிராண்ட் ஏர்-பேக்ஸ் மற்றும் ரியர் பார்கிங் சென்சார்கள் வழக்கம் போலவே இடம் பெற்றுள்ளன. இந்த கார்களில் எந்தவிதமாக மெக்கனிக்கல் மாற்றமும் செய்யப்பட வில்லை. முந்திய மாடல்களில் இடம் பெற்ற அதே இன்ஜின்கள் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது.

You May Like:இந்திய மார்க்கெட்டில் பயன்படுத்தப்பட்ட பைக்களுக்கான பிரிவில் நுழைகிறது ஹார்லி டேவிட்சன்

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன் கார்களின் ஆற்றலை பொறுத்தவரை, இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார்கள், 82bhp மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்கள் 74bhp கொண்டதாக இருக்கும். இதில் உள்ள பேஸ் ரிம்கள் 5-ஸ்பீட் மெனுவல் மற்றும் AMT யூனிட் கொண்டதாக இருக்கும். மிட் லெவல் V மற்றும்  ரேஞ்ச் டாப்பிங் z டிரிம்களை பெற்றிருக்கும்.

Maruti Suzuki Swift-Limited Edition

You May Like:இந்தியாவில் அறிமுகமானது ஜீப் காம்பஸ் லிமிடெட் பிளஸ், விலை ரூ 21.07 லட்சம்

மாருதி சுசூகி ஸ்விஃப்ட், இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி கார்களின் வரிசையில் ஆல்டோ, டிசையர் கார்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த காரை மாதம் ஒன்றுக்கு 19,000 யூனிட்களை விற்பனை செய்ய மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஷோரூம்களுக்கு வந்துள்ள இந்த புதிய லிமிடெட் எடிசன் கார்கள், தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்விஃப்ட் கார்கள், ஹூண்டாய் கிராண்ட் i10, ஃபோர்டு ஃபிகோ, டொயோட்டா எட்டியோஸ், மஹிந்திரா KUV 100 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

[the_ad_placement id="left-article"]
[the_ad_placement id="left-article"]