இந்தியாவில் எக்ஸ்பெண்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும்: மிட்சுபிஷி நிறுவனம்

Mitsubishi Xpander SUV Car News

மிட்சுபிஷி எக்ஸ்பெண்டர், தனது அடுத்த ஜெனரேசனான, ஜப்பானிய டிசைன் MPV-வை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த கார்கள் இந்தோனேசியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த நாட்டு பணத்தில் 199 மில்லியன் விலைக்கு விற்பனை செய்யப்படும் இந்த கார்களின் இந்திய விலை மதிப்பு சரசரியாக 9.40 லட்ச ரூபாயாக இருக்கும்.

Mitsubishi Xpander SUV Dashboard

இந்த காரின் பிராண்ட் டிசைன் மிகவும் அழகிய வடிவிலும், சிலீக் ஹெட்லைட்களுடனும், பெரியளவிலான இண்டிகேட்டர்கள் மற்றும் பனிகால லைட்கள், மூன்று-ஸ்லாட் கிரில் மற்றும் பிரஸ்டு அலுமினியம் பினிஷ் மற்றும் யூனிக்யூ பம்பர் டிசைன் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதுமட்டுமன்றி பாக்ஸ் போன்ற அமைப்பு கொண்டுள்ளதால், பிராண்ட் மற்றும் ரியர்களை உள்ள ஷார்ப் கிரீஸ்களை தெளிவாக காட்டுவதை தவிர்க்க உதவுகிறது.

Mitsubishi Xpander SUV Seating

காரின் பின்புறம் L-வடிவிலான பும்ப்ராங் போன்ற கவரும் வடிவிலான லைட் மற்றும் உயர்ந்த பின்புற லீப்ஸ்கள், மிஷன் பிசினிஷ்டு அலாய் வீல்கள் போன்றவை எக்ஸ்பெண்டர் கார் மிகவும் அழகிய தோற்றத்துடன் இருப்பதை காட்டுகிறது. காரின் உட்புற வடிவமைப்பில், லைட்டான உட் பினிஸ்ட் பேனல்கள், சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஸ்போக்ஸ் கொண்ட ஸ்டீரிங் வீல் மறும் கிளாஸ் பிளாக் சென்டர் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள இன்ஸ்டுரூமென்ட் கன்சோல், பெரியளவிலான MID-யுடன் டாக்கோ மீட்டர் மற்றும் ஸ்பீடோ மீட்டர் ஆகியவ்ற்றுக்கிரையே இடையே பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாவது வரிசை சீட்களில் இருந்து ஒரே டச்சில் பின்புற பகுதியை தொடலாம்.

Mitsubishi Xpander

பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் வெளியாக உள்ள இந்த காரில், ஹில் ஸ்டார்ட் அசிட், ABS, ஆக்டிவ் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் எமர்ஜென்சி பிரேக்கிங் லைட்களும் பொருத்தப்பட்டுள்ளது. உயர்தரமான ஸ்பெக் கொண்ட எக்ஸ்பெண்டர் கார்கள் இந்தோனேசியாவில் 255.4 மில்லியன் விலையாக அறிவிகப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்புக்கு சரசாரியாக 12.10 ரூபாயாக இருக்கும்.

Mitsubishi Xpander Car News in Tamil

இந்த கார், 1499cc, 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 104hp ஆற்றலிலும் 6000rpm மற்றும் 141Nm டார்க்யூவில் 4000rpm-ல் இயங்கும். இந்த இன்ஜின்கள் 5-ஸ்பீட் மற்றும் 4-ஸ்பீட் கியர் பாக்ஸ் ஆப்சன்களில் கிடைக்கிறது. எக்ஸ்பென்டர் 4475mm நீளமும், 1750mm அகலம் மற்றும் 1700mm உயரம் கொண்டதாக இருக்கிறது. எக்ஸ்பெண்டர் எஸ்யூவிகள் வரும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை வரும் என்றும் இது, மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.