புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்

2018 Hyundai Santro Launched

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்களின் டி-எலைட் வகை 3.89 லட்ச ரூபாயிலும், முழுவதும் அஸ்டா வகைகள் 5.45 லட்ச ரூபாய் விலையிலும், ஸ்போர்ட்ஸ் CNG வகைகள் 5.64 லட்ச ரூபாயிலும் விற்பனை செய்யபடுகிறது.

You May Like:ஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களுக்கான ஆன்லைன் புக்கிங்கை தொடங்கி, 11,100 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. இந்த புக்கிங் தொடங்கிய முதல் 9 நாட்களிலேயே 14,000 புக்கிங்கள் பதிவாகி இருந்தன.

You May Like:வெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்

புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் 1.1 லிட்டர் இன்ஜின்களுடன் 69 bhp பெட்ரோல் வெர்சன்கள் மற்றும் CNG வெர்சன்கள் 59bhp ஆற்றலில் இயக்கும். இந்த காரின் பெட்ரோல் எக்னாமி 20.3 kmpl -ஆக ரேட்டிங் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் கார்கள் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மற்றும் CNG வெர்சன் 30.48 km/kg கொண்டதாக இருக்கும்.

You May Like:இந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி

புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் புதிய டிசைன்களுடன், பல வசதிகளையும் கொண்டதாக உள்ளது. இருந்தபோதும் இதில் LED டே டைம் ரன்னிங் லைட்கள் அல்லது புரொஜெக்டர் ஹெட்லேம்கள் இடம் பெறவில்லை. புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் அலாய் வீல்கள் பொருத்தப்படமால் உள்ளது. இதில் 14 இன்ச் ஸ்டீயரிங் வீல்கள் இடம் பெற்றுள்ளன.

2018 Hyundai Santro Launched India

You May Like:ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்

மேலும் இதில் 7 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இவை ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆன்டிராய்டு ஆட்டோ ஆகியவற்றுக்கு சப்போர்ட் செய்யும். டாப் வகை கார்கள் நான்கு கதவுகளிலும் பவர் விண்டோ மற்றும் சென்ட்ரல் லாக்கிங் கொண்டுள்ளது.

புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் அப்டேட் பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பாரம் ஹூண்டாய் K1 பிளாட்பாரம் என்று அழைக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி வழக்கமான பாதுகாப்பு அம்சங்கள், EBD உடன் கூடிய ABS ஆகிய இடம் பெற்றுள்ளன.