ரூ. 7.44 லட்ச ரூபாயில் அறிமுகமானது புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா

2018 Maruti Suzuki Ertiga

முற்றிலும் புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்கள் 7.44 லட்ச ரூபாய் விலையில் துவங்கும். இந்த எர்டிகா கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இஞ்சின்களில் கிடைக்கிறது.

2018 Maruti Suzuki Ertiga Launched

You May Like:ரூ. 84,578 விலையில் அறிமுகமானது 2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முற்றிலும் புதிய மாருதி சுசூகி எர்டிகா 2018 கார்களின் துவக்க விலையாக 7.44 லட்ச ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்சின்களில் கிடைக்கிறது. பெட்ரோல் இஞ்சின் கொண்ட கார்களில் ஆட்டோமேடிக் மற்றும் மெனுவல் கியர் பாக்ஸ் ஆப்சன்கள் உள்ளன. டீசல் கார்களில் 5- ஸ்பீட் மெனுவல் ஆப்சன் மட்டுமே கிடைகிறது.

முற்றிலும் புதிய மாருதி எர்டிகா கார்கள் 7 சீட் கொண்ட MPV அல்லது மல்டி பர்பஸ் வாகனமாக இருப்பதுடன், இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கார்களாக அறிமுகமாகியுள்ளது. புதிய எர்டிகா பெட்ரோல் மெனுவல் மாடல்கள் 7.44 முதல் 9.50 லட்ச ரூபாய் விலையிலும், பெட்ரோல் ஆட்டோமேடிக் எர்டிகா கார்கள், 9.18 முதல் 9.35 லட்ச ரூபாய் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா டீசல் கார்களின் விலை 8.84 முதல் 10.90 லட்ச ரூபாய் விலையில் விற்பனை க்கு வந்துள்ளது. அனைத்து விலைகளும் டெல்லியில் எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

You May Like:இந்தியாவில் புதிய எஸ்யூவி கார்கள் அறிமுகத்தை உறுதிபடுத்தியது ஸ்கோடா

புதிய மாருதி சுசூகி எர்டிகா கார்களில், புதிய டிசைன்களுடன், மிகவும் கவரும் லூக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா கார்களில், இடம் பெற்றுள்ள புரோஜெக்டர் லென்ஸ்களுடன் கூடிய ஹெட்லேம்கள், மற்றும் பூமராங் வடிவிலான LED டைல்லேம்கள் இந்த காருக்கு வோல்வோ லூக்கை கொடுக்கிறது.

புதிய எர்டிகா கார்களில் 15 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. டாப் ஸ்பெக் மாடல்களில் 15 இன்ச் வில்கள் வீல்காப்ஸ் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளது. புதிய கார்கள், புதிய கிரீன்ஹவுஸ் டிசைனில், பெரியளவில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, பிரீமியம் டொயோட்டா இனோவா கிரிஸ்டா கார்களை போன்று இருக்கும்.

புதிய மாருதி சுசூகி எடிகா கார்கள், இதற்கு முந்தைய ஜெனரேசன் கார்களை ஒப்பிடும் போது பெரியளவில் இருக்கும். மேலும் இது பெரியளவிலும் அகலமாகவும் இருக்கும். அதாவது இந்த கார் அதிக இடவசதியுடன், பயணிகள் மற்றும் லக்கேஜ்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

You May Like:லம்போர்கினி யுரூஸ் ST-X கான்செப்ட் வெளியானது

புதிய எர்டிகா கார்களின் டாப் ஸ்பெக் வகைகளில் டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ பொருத்தப்பட்டுள்ளது. புதிய சுசூகி எர்டிகா கார்களில் மூன்றாவது வரிசையில் அமருபவர்களுக்கு ஏற்ற வகையில் ரூப் மவுண்டட் ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் மரத்தாலான இன்சர்ட்களுடன் கூடிய டாஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் வீல், மிகவும் அழகிய இன்டீரியர்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது. MPV கார்களின் புட் கேப்பாசிட்டி 809 லிட்டர் அளவு கொண்டதவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை சீட்கள் மடக்கும் வகையிலும் இருக்கும்.

maruti suzuki ertiga rear

You May Like:முதல் முறையாக சூப்பர்கார் ‘SC18 ஆல்ஸ்டன்’-ஐ அறிமுகம் செய்தது லம்போர்கினி

இந்த கார்களின் இன்ஜின் பொறுத்தவரை, மாருதி சுசூகி எர்டிகா டீசல் கார்களில் ஒரே மாதிரியான மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 1.3 லிட்டர் DDIS 200 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 89bhp ஆற்றலுடன் பீக் டார்க்யூவில் 200Nm கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் 5-ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார்கள் 1.5 லிட்டர் K15 மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 103bhp ஆற்றலிலும், பீக் டார்க்யூவில் 138 Nm கொண்டதாக இருக்கும்

இந்த் இன்ஜின் 5-ஸ்பீட் மெனுவல் அல்லது 4-ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் பொருத்தப்பட்டு விற்பனை வந்துள்ள நிலையிலும், கூடுதலாக இதில் SHVS மைல்ட் ஹைபிரிட் சிஸ்டமும் பொருத்தப்பட்டிருக்கும்.

புதிய எர்டிகா பெட்ரோல் கார்களின், பெட்ரோல் மெனுவல் கார்களால் செலவாகும் அளவு 19.34kmpl ஆகவும் பெட்ரோல் ஆட்டோமேடிக் கார்களால் செலவாகும் அளவு 18.69Kmpl ஆகவும் இருக்கும். டீசல் வகை கார்களால் செலவாகும் அளவு 25.47 kmpl ஆகவும் இருக்கும். புதிய மாருதி சுசூகி எர்டிகா கார்கள் CNG இன்ஜின் ஆப்டன்களுடன் விரைவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.