ஹோண்டாவின் ஸ்பெஷல் எடிசன் WR-V, சிட்டி மற்றும் BR-V கார்கள் குறித்த தகவல்கள் வெளியீடு

Honda New Model Car News in Tamil

இந்தியாவில், திருவிழா காலம் தொடங்க உள்ளதை முன்னிட்டு,  ஹோண்டா கார் தயாரிப்பாளர்கள், வாடிக்கையாளர்களுக்காக  தங்களது  ஸ்பெஷல் எடிசன்  கார்களை வெளியிட்டுள்ளனர்.  ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்பதால், ஹோண்டா கார்ஸ் இந்தியா, தனது ஸ்பெஷல் எடிசன் கார்களான  WR-V, அலைவ் மற்றும் BR-V  ஸ்டைல் எடிசன் கார்களை வெளியிட்டு, இந்த சீசனில் தனது விற்பனையை  உயர்த்த மேலும் முடிவு செய்துள்ளது.

சிட்டி எட்ஜ், WR-V அலைவ் மற்றும் BR-V ஸ்டைல் எடிசன் கார்களில் டிசைனை பொறுத்தவரை பெரிய அளவில்மாற்றங்கள் எதுவும்  செய்யப்படவில்லை என்ற போதும், இந்த கார்களின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் சில மாற்றங்களுடன்,  வரவேற்கதக்க  வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி எட்ஜ் எடிசன்: ஹோண்டா நிறுவனம் சிட்டி எட்ஜ் எடிசன் கார்களை, பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளில், அவற்றின் விலையை முறையே 9.75  லட்சம் மற்றும் 11.10 லட்சம் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) வெளியிட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் SV டிரிம் மற்றும் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் கேமிரா மற்றும் ஸ்பெஷல் எடிசன் எம்பளத்துடனும்,  பிரீமியம் வசதியாக, குரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி,  டிரைவர் சீட் ஹைட் அட்ஜஸ்ட்டர் மற்றும் SRS ஏர்பேக் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

ஹோண்டா WR-V அலைவ் எடிசன்:   ஹோண்டாவின் S வெர்சன் கார்களை அடிப்படையாக கொண்ட  ஹோண்டா WR-V அலைவ் எடிசன் கார்களின் பெட்ரோல் வெர்சன்  விலை 8.02 லட்ச ரூபாய் விலையிலும், டீசல் வெர்சன் 9.11 லட்ச ரூபாய் விலையிலும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார்களில், வாடிக்கையாளர்களை  கவரும் வகையிலான 16 இன்ச் டைமண்ட் கட் வீல்கள், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் கேமிராவுடன் கூடிய டிஸ்பிளே, பிரீமியம் சீட் கவருடன் கூடிய ஸ்பெஷல் லோகோ, பிரீமியம் ஸ்டியரிங் கவர், இதுமட்டுமின்றி, ஒருமாதம் இலவச ஹோண்டா  கனெக்ட் சப்கிரிப்சனையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ஹோண்டா BR-V ஸ்டைல் எடிசன் :  ஹோண்டா BR-V ஸ்டைல் எடிசன் E டிரிம் பேஸ், ஸ்டைலான ஸ்பெஷல் எடிசன் எம்பளம், பிராண்ட் கார்டு, டைல்கேட் ஸ்பாயிலர், பாடி சைட் மோல்டிங் மற்றும் பிராண்ட் மற்றும் ரியர் பம்பர் புரோடைக்டர், டெல்லியில் எக்ஸ் ஷோரூம்  விலையிலேயே விற்பனை செய்யப்பட உள்ளது.

பெட்ரோல் கார்களை பொறுத்த வரை,

  • S MT Style (petrol) – Rs 10.44 lakh
  • V MT Style (petrol) – Rs 11.59 lakh
  • VX MT Style (petrol) – Rs 12.63 lakh
  • V CVT Style (petrol) – Rs 12.77 lakh
  • S MT Style (diesel) – Rs 11.79 lakh
  • V MT Style (diesel) – Rs 12.65 lakh
  • VX MT Style (diesel) – Rs 13.74 lakh