90 நாட்கள் வெயிட்டிங் பிரீயட்-ல் விற்பனையாகிறது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ

new-hyundai-santro

ஹூண்டாய் சாண்ட்ரோ பெட்ரோல்- மெனுவல் கார்களுக்கான புக்கிங் 38,500-ஐ அடைந்துள்ளது. இந்த புக்கிங் சதவிகிதம் AMT மற்றும் CNG மாடல்களில் முறையே 52 மற்றும் 18 சதவிகிதமாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள சில ஹூண்டாய் டீலர்களிடம் செக் செய்ததில், பெட்ரோல்-மெனுவல் மற்றும் பெட்ரோல்-ஏஎம்டி சாண்ட்ரோ கார்களுக்கான வெயிட்டிங் பிரியட் இரண்டு மாதத்திற்கு மேலாக இருக்கும் என்றும், இதே நிலையில் CNG பொருத்தப்பட்ட மாடல்களுக்கான வெயிட்டிங் பிரீயட் மூன்று மாத காலமாக இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

2018 Hyundai Santro Bookings

You May Like:2 மில்லியன் மைல்கல்லை எட்டிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனை

கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது முதல் சாண்ட்ரோ கார்களுக்கான புக்கிங் 38,500-ஆக உள்ளது என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் குறித்து 2.1 லட்சம் என்கொயரி-கள் வந்துள்ளது. இது சாண்ட்ரோ கார்களுக்கு போட்டியாக உள்ள மாருதி சுசூகி செலீரோ மற்றும் டாட்டா டைகோகோ கார்கள் பெற்ற என்கொயரிகளை விட அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் சாண்ட்ரோ ஹாட்ச்பேக்களுக்கான புக்கிங் கடந்த அக்டோபர் 10-ம் தேதி தொடங்கப்பட்டது.

2018 Hyundai Santro Dashboard

You May Like:வெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக்

கொரியா தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவன அறிக்கையில், AMT பொருத்தப்பட்ட மாடல்களுக்கான புக்கிங் 30 சதவிகிதமும், இதே நிலையில் சாண்ட்ரோ CNG மாடல்களுக்கான புக்கிங் 18 சதவிகிதமும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. AMG மற்றும் CNG கிட்கள் மிட்-ஸ்பெக் மேக்னா மற்றும் ஸ்போட்டிஸ் டிரிம்கள் (விலை ரூ.5.18-5.64 லட்சம்) மட்டுமே கிடைக்கிறது எஞ்சியுள்ள 52 ச்த்விகித புக்கிங்கள் வழ்க்கமான பெட்ரோல்-மெனுவல் வகைகளுக்கு செய்யப்பட்டவையாகும். ஹூண்டாய் நிறுவனம் பிரத்தியோகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மிட்-ஸ்பெக் டிரிம்களான எரா, மாக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் அதிக டிமாண்ட்களை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Like:‘திரிலிங் ரைடு’ அனுபவத்தை அளிக்கும் கேடிஎம் 125 டியூக் அறிமுகமானது; விலை ரூ. 1.18 லட்சம்

சாண்ட்ரோ கார்களின் அறிமுகம் விலையாக 3.89 லட்சம் ரூபாய்க்கு பேஸ் டி-லைட் டிரிம்கள் கிடைக்கிறது. இதில், டாப்-ஸ்பெக் கொண்ட அஸ்டா வகைகள் 5.45 லட்ட லட்ச ரூபாய் விலையில் விற்பனையாகிறது. புதிய ஹாட்ச்பேக்காக வெளியாகியுள்ள USP-களில் சில பிரிவுகளில் முதல் முறையாக சில வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரியர் ஏசி வென்ட்கள் மற்றும் 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் போன்றவை இடம் பெற்றுள்ளது. உயர் திறன் கொண்ட வகைகளில் டூயல் பிராண்ட் ஏர்பேக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற டிரிம்களில், டிரைவர் சைடில் மட்டுமே எர்பேக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

You May Like:இந்தியாவில் அறிமுகமானது 2018 மஹிந்திரா அல்ட்ராஸ் ஜி4; விலை ரூ. 26.95 லட்சம்

சாண்ட்ரோ அறிமுகம் விலையாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது விலைகள் முதல் 50 ஆயிரம் புக்கிங்களுக்கு மட்டுமே என்றும், இதை தொடர்ந்து வரும் புக்கிங்களுக்கு சாண்ட்ரோ கார்களின் விலை உயர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

வகைகள் – விலை

சாண்ட்ரோ டி-லைட் – ரூ. 3.89 லட்சம்
சாண்டோ எரா – ரூ 4.24 லட்சம்
சாண்ட்ரோ மாக்னா எம்டி – ரூ. 4.57 லட்சம்
சாண்ட்ரோ மாக்னா AMT – ரூ 5.18 லட்சம்
சாண்ட்ரோ மாக்னா சிஎன்ஜி – ரூ .5.23 லட்சம்
சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எம்டி – ரூ 4.99 லட்சம்
சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் AMT – ரூ 5.46 லட்சம்
சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி – ரூ 5.64 லட்சம்
சாண்ட்ரோ அஸ்டா – ரூ 5.45 லட்சம்