2018 நிசான் மிக்ரா, மிக்ரா ஆக்டிவ் கார்கள் ரூ.5.03 லட்சம் விலையில் அறிமுகமானது

Nissan Micra Car News

நிசான் நிறுவனம் 2018-ம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட மிக்ரா ஹாட்ச்பேக்-ஐ வெளியிட்டுள்ளது. மிக்ரா மற்றும் மிக்ரா ஆக்டிவ் என்று அழைக்கப்படும் மாடல்களின் விலை முறையே ரூ.6.20 லட்சம் மற்றும் ரூ.7.90 லட்சத்திற்கு இடைப்பட்ட விலையிலும், ரூ. 5.03 லட்சம் மற்றும் 5.96 லட்சத்திற்கு  இடைப்பட்ட விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

Nissan Micra Hatchback India Car Newsஇந்த கார்களின் புதிய மாடல்களில், ஸ்டைலிங் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஒரே ஒரு மாற்றமாக, இதில் திரும்புவதை அறிவிக்கும் இன்டிக்கேட்டர்கள், வெளிப்புற கண்ணாடிகளில் வைக்கப்பட்டுள்ளது. டாப்-ஸ்பெக் மிக்ரா பெட்ரோல்-CVT கார்களில், ரியர் ஸ்பாயிலர் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருவிகளை பொறுத்த வரையில், இரண்டு மாடல்களிலும், வழக்கமாக உள்ளதை போன்று  பிராண்ட் ஏர்பேக்-கள் (முந்தைய மாடல்களில், டிரைவர் பகுதியில் மட்டுமே ஏர்பேக் இருக்கும், அதுவும் லோயர் டிரிமில் அமைக்கப்பட்டிருக்கும்) டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் எச்சரிக்கை செய்யும் இன்டிக்கேடர் மற்றும் ஸ்பீட் வார்னிங் ஆகியவற்றுடன் வெளிவருகிறது. இவற்றுடன், வழக்கமாக கார்களில் இடம் பெறும் ரியர் பார்க்கிங் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளது.

Nissan Micra Seatingமிக்ரா XV மற்றும் மிக்ரா ஆக்டிவ் XV (டாப்-ஸ்பெக் டிரிம்ஸ்) கார்கள், தற்போது 6.2 இன்ச் டச்ஸ்கிரீன் இன்போடேயன்மென்ட் சிஸ்டம் மற்றும் மிரர்லிங்க் ஆகியவைகளும் பொருத்தப்பட்டுள்ளது. முன்பு இந்த இன்போடேயன்மென்ட் சிஸ்டம்கள், கடந்த 2017ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட லிமிடெட்-ரன் மிக்ரா பேஷன் எடிசன் கார்களில் பொருத்தப்பட்டிருந்தது.

மிக்ரா ஆக்டிவ் கார்கள், 68hp/104Nm, 1.2 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜினுடனும், 5-ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ் உடனும் வருகிறது. மிக்ரா கார்கள் இரண்டு வகையான இன்ஜின் ஆப்சன்களுடன் கிடைகிறது. அவை, 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல், இந்த கார்கள் 77hp  ஆற்றல் மற்றும் 104Nm டார்க்யூ (அத்துடன் CVT ஆட்டோமேடிக் இணைக்கப்பட்டுள்ளது) மற்றும் பெயர்பெற்ற (ரெனால்ட் நிசான்ஸ்) K9K,  1.5 லிட்டர் டீசல், 64hp ஆற்றலுடனும் உச்சகட்ட வேகத்தில் 160Nm டார்க்யூ, 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளிவருகிறது.

Nissan Micra Car news in Tamilமிக்ரா ஆக்டிவ் XL (பெட்ரோல்-மெனுவல்) கார்களின் விலை   ரூ.5.03 லட்சம் (எக்ஸ் ஷோரூம் விலை), மிக்ரா பேஷன் எடிசன் XL (பெட்ரோல்-CVT) கார்களின் விலை  ரூ.6.20 லட்சம் (எக்ஸ் ஷோரூம் விலை, டெல்லியில்),  மிக்ரா (பெட்ரோல்-CVT) XL(O) கார்களின் விலை  ரூ.6.42 லட்சம், மிக்ரா (டீசல்-மெனுவல்) XL(O) கார்களின் விலை  ரூ.7.21 லட்சம்,  மிக்ரா ஆக்டிவ் XL (O) (பெட்ரோல்-மெனுவல்) கார்களின் விலை  ரூ.5.41 லட்சம்  மிக்ரா (பெட்ரோல்-CVT) XV கார்களின் விலை  ரூ.7.91 லட்சம், மிக்ரா (டீசல்-மெனுவல்) XV கார்களின் விலை  ரூ.7.91 லட்சம்,  மிக்ரா ஆக்டிவ் XV (பெட்ரோல்-மெனுவல்) கார்களின் விலை  ரூ.5.98 லட்சம் (எக்ஸ் ஷோரூம் விலை).