இந்தியாவில் சோதனை செய்யப்பட்டது நிசான் கிக்ஸ் SUV

Nissan Kicks Tamil News

இந்திய மார்க்கெட்டில் 2019ம் ஆண்டில் நிசான் கிக்ஸ் SUV கார் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கார் இந்தியா சாலைகளில் சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியானது.

இன்னும் அறிமுகம் செய்யப்படாத நிலையில், இந்த கார்கள், ஹூண்டாய் கிரட்டா மற்றும் ரெனோல்ட் கேப்டூர் கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்றும்,  இந்த காரின் விலை  11-16 லட்ச ரூபாய்க்கு இடைப்பட்டதாக இருக்கலாம்  (எக்ஸ் ஷோரூம் விலை) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைனை பொறுத்தவரை, நிசான் கிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கவர்ச்சிகரமான ஸ்டைலிங் கொண்டதாக இருக்கும். காரின் கேபின் பகுதி அதிக இடவசதி கொண்டதுடன், உள்ளரங்காரங்களுடன் கூடிய வசதிகள், இந்த காரை தனித்துவமான கார் என்று உணர செய்யும். ஜப்பான் பிராண்ட்கள் இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனை ஆகாமல் உள்ள நிலையில், நிசான் கிக்ஸ், தங்கள் வர்த்தகத்தை இந்திய மார்க்கெட்டில் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளது.

ஸ்டைலிலான டிசைன் தவிர்த்து, மார்க்கெட்டை கவரும் வகையிலான பல வசதிகளை நிசான் காரில் பொருத்தியுள்ளது. அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தங்கள் நிறுவனம் காட்டி வரும் ஆர்வமே இந்த காரில் அதிக தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு வகைகளில் கிடைக்கும் இந்த கார்களின் இந்திய ஸ்பெக், சர்வதேச மாடல்களின் ஸ்பெக்-ஐ ஒப்பிடும் போது மாறுபட்ட ஆற்றல் மற்றும் டார்க்யூ கொண்டிருக்கும்.