2019 ஐசிசி உலககோப்பை கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ காரானது நிசான் கிக்ஸ்

Nissan ICC Cricket World Cup

ஐசிசி உலககோப்பை கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ காராக மாறியுள்ள நிசான் கிக்ஸ் கார்கள் இந்தியாவில் உலக கோப்பை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது. அதாவது, இந்த கார்கள் ஐசிசி கிரிக்கெட் உலககோப்பையை இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களுக்கு எடுத்து செல்ல உள்ளது.

முற்றிலும் புதிய நிசான் கிக்ஸ் கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த கார்களை பிரபலபடுத்தும் பணிகளில் நிசான் இந்தியா நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் வரும் 2019ம் ஆண்டு மே மாதம் 30 முதல் ஜூலை 14ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், வரும் 2019ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ காராக நிசான் கிக்ஸ் கார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ காராக நிசான் கிக்ஸ் கார்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய நகரங்களான புனே, அஹாமதாபாத், பெங்களுரூ, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய 8 நகரங்களுக்கு இந்த கார்களில் வைத்து உலக கோப்பை கொண்டு செல்லப்பட உள்ளது.

You May Like:இந்தியாவில் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ் சுள்ளினான்; விலை ரூ. 6.95 கோடி

நிசான் – ஐசிசி இணைப்பு மற்றும் டிராபி டூர் குறித்து பேசிய நிசான் இந்தியா தலைவர் தாமஸ் குஹல், இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் விரும்பப்படும் விளையாட்டாக இருந்து வருகிறது. இந்த ஒரு விளையாட்டு இந்தியா முழுவதையும் ஒருங்கிணைத்துள்ளது பெருமை கொள்ள வைக்கிறது. ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ காரக நிசான் கிகஸ் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க, ஐசிசி டிராபியுடன் இந்தியாவின் 8 நகரங்களில் பயணமாக உள்ளது என்றார்.

ஐசிசி உடன் நிசான் பார்ட்னர்ஷிப் அமைப்பது இது முதல் முறையல்ல. உண்மையில் ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம், முன்பே 8 ஆண்டு பார்ட்னர்ஷிப்பில் இருந்துள்ளது. இதில், UEFA சாம்பியன்ஸ் லீக், சிட்டி கால்பந்து குருப் மற்றும் FIA பார்முலா E ஆகியவையும் உள்ளடக்கியதாக இருந்தது.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட்யை முன்னனிட்டு, நிசான் கிக்ஸ் கார்கள் அறிமுகத்திற்கு முன்பு முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வர உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் இந்த காரை மிக அருகில் இருந்து பார்க்க முடியும்.

You May Like:ரூ. 2.13 லட்ச விலையில் அறிமுகமானது ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு 500X ABS

இந்த கார்கள் 2019 ஜனவரியில் அறிமுகம் ஆகும் என்றும் புதிய கிக்ஸ் கார்கள், ஐரோப்பிய ஸ்பெக்கில் இருந்து பல்வேறு வகையான மாற்றங்களை கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

V பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார்கள், இந்தியாவுக்காக டெர்ரனோவின் B0 பிளாட்பார்மில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவில் வெளியானதை விட பெரியதாக இருக்கும். இந்த எஸ்யூவிகள் புதிய ஸ்டைலில் பல்வேறு வசதிகளுடன் இந்திய மார்க்கெட்டுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிசான் கிக்ஸ் கார்கள் இந்தியா மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டால், நிசான் ரேர்ரனோ, ஹூண்டாய் கிரட்டா, மற்றும் ரெனால்ட் கேப்டூர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த கார்களின் விலை 11 முதல் 16 லட்ச ரூபாயாக இருக்கும் (எக்ஸ் ஷோ ரூம் விலை) என்று எதிர்பார்க்கப்படுகிறது.