2018 நிசான் மிக்ரா காரை ஏன் வாங்க வேண்டும்?

2018 Nissan Micra Car News

நிசான் நிறுவனம், தனது மிக்ரா காரை மேம்படுத்தி 2018ம் ஆண்டு மாடலாக வெளியிட்டுள்ளது. ஜப்பனை சேர்ந்த ஹாட்ச்பேக் நிறுவனம் தற்போது கூடுதலாக வசதிகளுடன் மிர்கா காரை வெளியிட்டுள்ளது. இந்த காரில் காஸ்மடிக்-ஐ பொறுத்தவரை, எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தபோதிலும், இதே போன்ற கார் வகைளில்,பாதுகாப்பான காராக மிர்கா கார்கள் மாறியுள்ளது.

இவ்வளவு வசதிகள் கொண்ட 2018எம்ஒய் மிர்கா காரை ஏன் நாம் வாங்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக காணலாம்.

Nissan Micra Interior

மிர்காவில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:

2018எம்ஒய் அப்டேட்டட், மிர்கா கார்களில், டுயல் பிராண்ட் ஏர்பேக்ஸ்கள், வழக்கமாக உள்ளது போன்று ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் வார்னிங் மற்றும் ஸ்பீட் வார்னிங் டிவைஸ் ஆகியவைகளும் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்வி டிரிம், ரியர்வியூ கேமிரா மற்றும் OVRM-களில் வளைய போவதை உணர்த்தும் இன்டிக்கேட்டர்களுடன், ரூப்பில் ரியர் ஸ்பாயிலரும் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நேவிகேஷனுடன் கூடிய 6.2 இன்ச் டச் ஸ்கிரின் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி ஆகியவைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் நிசான் கனெக்ட்டும் கிடைக்கும். ஆனாலும், XV-க்கு மேற்பட்ட வகைகளில் மட்டுமே டச் ஸ்கிரீன் வசதி கிடைக்கும்.

மிர்கா கார் வகைகளில் பி-பிரிவு ஹாட்ச்பேக்-கள் புஷ் பட்டன் ஸ்டார்ட், பவர் விண்டோஸ், ஆட்டோ-போல்டிங் மிரர்கள், கீலெஸ் என்ட்ரி மற்றும் பெல் மற்றும் விசில்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் CVT டிரான்ஸ்மிஷனுடன் வழக்கமான பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. சிறந்த ஆற்றல் மற்றும் எரிபொருளை சேமிக்கும் நோக்கில் 1.5 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் கார்கள் டெஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.

Nissan Micra Car News in Tamil

மிர்கா காரில் இடம் பெற்றுள்ள குறைகள்

போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில் மிர்கா கார்களுக்கான முறையான பேஸ்லிப்ட்கள் தற்போதும் வெளியிடப்படவில்லை. இந்த கார்கள், V-மோஷன் டிசைனை பெற்றிருந்த போதும், புதிய ஜெனரேசன் மிர்கா ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை வந்துவிட்டது. இந்தியா மார்க்கெட்டில் நிசான் நிறுவன கார்களுக்கான ஆப்டர்சேல் சர்விஸ் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த காரின் மேம்படுத்தப்பட்ட வெர்சனில் மெக்கனிக்கல் மாற்றங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

மிர்கா கார் வகைகளில் எந்த வகை மாடலை வாங்கலாம்.

மிர்கா கார் வகைகளில் முழுவதும் வடிவமைக்கப்பட்ட XV டிரிம் கார்கள் சிறந்த கார்களாக கருதப்படுகிறது. பல வசதிகளுடனும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்சன்களுடன், சாய்ஸ்சாக, மெனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் இந்த கார்களில் உள்ளது.

2018 Nissan Micra Rearview

மிர்கா காரின் ஸ்பெசிபிகேஷன் எப்படி உள்ளது?

பெட்ரோல் 1.2 லிட்டர், 75bhp/104Nm மற்றும் டீசல் 1.5 லிட்டர் 65bhp/160Nm டிரான்ஸ்மிஷன் – 5 ஸ்பீட் மெனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக்

மிர்கா குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது?

1982ம் ஆண்டு முதல் மிர்கா பேட்ஜ்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதே பேட்ஜ் உடன் இந்தியா உள்பட சில நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. ரெனால்ட் பிளஸ் வெர்சன்கள் மாற்றியமைக்கப்பட்ட பேட்ஜ் உடன் விற்பனை செய்யப்பட்டது.