நிசான் சன்னி ஸ்பெஷல் பதிப்பு அறிமுகம்; விலை ரூ. 8.48 லட்சம்

nissan sunny special edition

நிசான் கனெக்ட் மற்றும் பில்ட்இன் 6.2 இன்ச் டச்ஸ்கிரீன் AVN மற்றும் மேம்ப்படுத்ப்பட்ட இன்போடேய்ன்மென்ட்களுடன் போன் மானிட்டரிங் வசதிகளுடன் வெளி வந்துள்ளது. நிசான் சன்னி ஸ்பெஷல் பதிப்பு.
nissan sunny special edition frontview

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


விழாகால சீசனை முன்னிட்டு நிசான் இந்தியா நிறுவனம் தனது நிசான் சன்னி ஸ்பெஷல் பதிப்பு-ஐ வெளியிட்டள்ளது. பெரிளவிலான காஸ்மெடிக் மாற்றங்களுடன் வெளியே வந்துள்ள இந்த சிறப்பு எடிசன் கார்களின் விலையாக 8.48 லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சன்னி சிறப்பு எடிசன் கார்கள், பிளாக் ரூஃப் வார்ப், புதிய பாடி டிகால்ஸ் மற்றும் பிளாக் வீல் கவர்களுடன் கூடிய புதிய ரியர் ஸ்பாயிலர்களையும் கொண்டுள்ளது. இந்த காரின் கேபின் பகுதியிலும் சில வதிகள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன.
nissan sunny special edition dashboard

You May Like:ரூ. 20.59 லட்சத்தில் அறிமுகமானது ஜீப் காம்பஸ் பிளாக் பேக் பதிப்பு

நிசான் சன்னி சிறப்பு பதிப்பு கார்களில் நிசான் கனெக்ட் மற்றும் பில்ட்இன் 6.2 இன்ச் டச்ஸ்கிரீன் AVN மற்றும் மேம்படுத்ப்பட்ட இன்போடேய்ன்மென்ட்களுடன் போன் மானிட்டரிங் வசதிகளும் இடம் பெற்றுள்ளது. நிசான் கனெக்ட் மட்டுமின்றி இதில் ஜியோ-ஃபேன்சிங், ஸ்பீட் அலர்ட், தடை உத்தரவு குறித்த அலர்ட், அருகில் உள்ள பிட்-ஸ்டாப்கள், லொக்கேட் மை கார் மற்றும் ஷேர் மை கார் லொகேஷன் அட்ரஸ் மற்றும் கார் பாதுகாப்புக்காக சில வசதிகளும் செய்யபபட்டுள்ளது. கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ்-ஸ்டாப்-ஸ்டார்ட் செயல்களை இன்டலிஜென்ட் கீ மூலம் செய்தல் மற்றும் காரில் பயணிக்கும் பயணிகளுக்கு உதவ “லீட் மீ டு கார்” என்ற வழிகாட்டுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
nissan sunny special edition seating

You May Like:ரூ. 5.53 லட்ச ரூபாயில் விற்பனைக்கு வந்துள்ளது டாட்டா மோட்டார்சின் டியாகோ என்ஆர்ஜி

நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட். லிமிடெட்டின் உயர் அதிகாரி ஹார்டீப் சிங் பிரார், நிசான் சன்னி எங்கள் தயாரிப்பில் சிறந்த செடான்களாக உள்ளது. பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு தேவையானவற்றை அளித்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
nissan sunny special edition wheels

You May Like:வெர்னா பதிப்பை வெளியிட்டு 20 ஆண்டை நிறைவை கொண்டாடும் ஹூண்டாய்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


மேலும் பேசிய அவர், எங்கள் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கருத்துகளை அறிந்து கொண்டு வருகிறோம். தற்போது நிசான் சன்னி சிறப்பு எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் பெருமை கொள்கிறோம். இந்த கார்கள் வாடிக்கையாளர் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டதுடன், ஸ்மார்ட் தொழில்நுட்ப மேம்பாடுகளும் இடம் பெற்றுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன வசதிகளுடன் பயணம் செய்யும் அனுபவத்தை கொடுக்கும் என்றார்.
nissan sunny special edition rearview

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


சன்னி சிறப்பு பதிப்புகள் இரண்டு பவர்டிரெயின்களுடனும், 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வகைகளில் கிடைகிறது. பெட்ரோல் இன்ஜின்கள் X-tronic CVTகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் 5-ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் எர்பேக்ஸ், ஸ்பீட்-சென்சிங் டோர் லாக் மற்றும் டிரைவர் சீட் பெல்ட் ரிமைன்டர்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.