வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு இனி சர்வதேச லைசென்ஸ் தேவையில்லை – சிறப்பு தொகுப்பு

Indian Driving License News in Tamil

வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவோர் குறிப்பிட்ட சில நாடுகளில் தங்களது இந்திய டிரைவிங் லைசென்சை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடகை கார் ஓட்டுனர்கள் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டிய சிக்கல் இருக்காது.
Driving License News in Tamil
சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, சுவிட்ஸ்ர்லாந்து, நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள், தங்கள் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய ஓட்டுநர் உரிமத்தை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளன. இதனால், இந்த நாடுகளில் வாகனம் ஓட்ட சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டியதில்லை என்ற போதும், ஒரு சில கட்டுபாடுகளை விதித்துள்ளன. அவற்றை இங்கே விரிவாக காணலாம்.
Driving License

You May Like:ரூ. 2.19 கோடி விலையில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63

ஆஸ்திரேலியாவில் சாலை விதிகள் இந்தியாவில் இருப்பது போன்றே காணப்படுகிறது. ஆனாலும், சாலையின் இடதுபுறம் வாகனத்தை இயக்க வேண்டும் அதுமட்டுமின்றி டிரைவர் சீட் வாகனத்தின் வலதுபுறம் இருக்கும். சவுத் வேல்ஸ், குயின்ஸ் லேண்ட் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே இந்தியர்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்ட வதற்கு 3 மாதங்களுக்கு இந்தியர்களின் டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியாகும். ஆனால், அவை ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் இல்லையென்றால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள், அங்குள்ள அனைத்து வாகனங்களையும் ஓட்ட தங்களது இந்திய டிரைவிங் லைசென்சை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும் அவர்களது இந்திய டிரைவிங் லைசென்ஸ் ஒரு வருடம் வரை மட்டுமே செல்லுபடியாகும்.

You May Like:அறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்

Driving License News
பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் தங்கள் இந்திய டிரைவிங் லைசென்சை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட போதும், இந்த லைசென்ஸ் ஒரு வருடம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், அங்கு இந்திய லைசென்ஸ் பெற்றவர்கள் குறிப்பிட்ட சில வாகங்களுக்கு மட்டுமே ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள்.

சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்தில் இந்திய டிரைவிங் லைசென்சை வருட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வாகனம் ஓட்டுபவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

You May Like:ரூ. 37.50 லட்ச விலையில் அறிமுகமானது 2018 பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I

ஜெர்மனி இந்திய டிரைவிங் லைசென்சை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதோடு, வேறு எந்த கட்டுபாடும் விதிக்கவில்லை.
Foreign Driving News in Tamil
நார்வே நாட்டில் இந்திய டிரைவிங் லைசென்சை பயன்படுத்தி 3 மாதங்கள் வாகனங்களை இயக்க முடியும்.

தென்னாப்பிரிக்காவில், இந்திய டிரைவிங் லைசென்சை ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் அதனுடன் ஓட்டுநரின் புகைப்படம் மற்றும் கையொப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், அங்கு வாடகைக்கு கார் எடுத்தால் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.