இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Prices Hiked

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இது புதியதல்ல என்ற போதும், சமீபத்திய பெட்ரோல், டீசல் விலை இந்தியாவின் தலைநகரான டெல்லியில் லிட்டருக்கு முறையை 79.99 மற்றும் 72.07 ஆக உள்ளது. இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். பெட்ரோல், டீசல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் நேற்று, டெல்லியில் பெட்ரோல் விலையில் 48 பைசாவையும், டீசல் விலையில் 52 பைசாவையும் உயர்த்தியது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.68 ரூபாயும், டீசல் விலை 4.25 ரூபாயும் அதிகரித்து இருந்தது. இந்த உயர்வுக்கு முன்பு, மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 86.9 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 ரூபாயாகவும் இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


Petrol GST News in Tamil

You May Like:டாட்டா நெக்ஸான் க்ராஸ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 7.14 லட்சம்

கடந்த மே மாதம் 28ம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 69.31 ரூபாயாக இருந்தது. இது இதற்கு முந்தைய பெட்ரோல், டீசல் விலைகளை விட அதிகமாகும். இந்த விலை கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி அப்டேட் செய்யப்பட்டது. அன்று முதல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர தொடங்கியது. இந்த விலை உயர்வு தொடர்ந்து எதிர்கட்சிகள் மோடி அரசே இந்த உயர்வுக்கு பொறுபேற்க வேண்டும் என்றும் குற்றம்சாட்ட தொடங்கின. இதற்கு பதிலளித்து பேசிய இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சர்வதேச விலையேற்றமே இந்த பெட்ரோல் , டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிவித்தார்.
GST News in Tamil

You May Like:2018 டாட்சன் ரெடி-கோ லிமிட்டெட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ 3.58 லட்சம்

இந்தியா ரூபாய்க்கு எதிரான டாலரின் விலை 71 ரூபாயாக அதிகரித்தும். குருட் ஆயில் விலை 7 டாலராக அதிகரித்து உள்ளதாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.17 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

You May Like:பைக்கை குப்பையில் வீசியவரை கவரும் புதிய பைக்?