இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான காரணம் தெரியவேண்டுமா?

Petrol-Diesel Price cuts 2.50

சமீபகாலமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சமீபகாலமாக குறைந்து வருவது ஏன் என்று தெரியுமா?

இந்த காரணம் குறித்து விரிவான மற்றும் முழுமையான விளக்கம் இதோ

மாதம் இரு முறை அதாவது 15ம் தேதி மற்றும் மாத இறுதி நாளில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலைகள் உயர்த்தப்பட்டு வந்தன. இந்த நடைமுறையை மத்திய பி.ஜே.பி. அரசு, கடந்த ஜூன் மாதம் மாற்றி, அன்றாடம் பெட்ரோல், டீசலின் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அப்போது முதல் பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

கிடுகிடு வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த மாதம் 17- ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

Diesel Tax in Tamil Nadu

You May Like:ரூ. 2.13 லட்ச விலையில் அறிமுகமானது ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு 500X ABS

இந்த விலை குறைப்புக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருவதே காரணம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You May Like:ரூ. 64, 998 விலையில் அறிமுகமானது 2019 பஜாஜ் பல்சர் 150

முழுக்க முழுக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு நாடு ஈரான். ஆனால் கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து ஈரானை தனிமைப்படுத்தி விட வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா இவ்வாறு உலக நாடுகளை மிரட்டியது.

முன்னதாக இந்த விவகாரத்தில் கெடு ஒன்றை அமெரிக்கா விதித்திருந்தது. கடந்த நவம்பர் 4ம் தேதிதான் அந்த கெடு. அதாவது நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு ஈரானில் இருந்து எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியது.

ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனெனில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால், உலகின் பல்வேறு நாடுகளும் வெகுவாக பாதிக்கப்படும்.

எனவேதான் டொனால்டு ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் திருப்பம் ஒன்று அரங்கேறியது.

அதாவது ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்ற தனது எச்சரிக்கையில் இருந்து, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, துருக்கி, கிரீஸ் மற்றும் தைவான் ஆகிய 8 நாடுகளுக்கு அமெரிக்கா திடீரென அடுத்த விலக்கு அளித்தது.

Petrol Price in Chennai

You May Like:2 மில்லியன் மைல்கல்லை எட்டிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனை

என்றாலும் மேற்கண்ட 8 நாடுகளுக்கும் தற்காலிகமாக மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது என அமெரிக்கா தெரிவித்தது. அதாவது அடுத்த 6 மாதங்களுக்கு இந்த விலக்கு பொருந்தும். அதற்குள்ளாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியது.

எனவே இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மிகவும் அதிகப்படியான விலையில் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை தற்போது இருப்பதை காட்டிலும் இன்னும் அதிகமாக உயர்ந்து விடக்கூடிய அபாயம் நிலவி வந்தது.

You May Like:90 நாட்கள் வெயிட்டிங் பிரீயட்-ல் விற்பனையாகிறது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ

ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் விலக்கு அளிக்கும்படி, அமெரிக்காவுடன் இந்தியா பேச்சு நடத்தியது. அமெரிக்காவின் மிரட்டலை அடுத்து ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவைக் கணிசமாக குறைக்க இந்தியா தயாராகி வருவதாகவும் இருந்தது. அவ்வாறு குறைக்கும்பட்சத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்.

எனவேதான் மக்களின் நலன் கருதி இந்தியா, அமெரிக்காவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஈரானில் இருந்து மொத்தம் 2.57 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்திருந்த இந்தியா, கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 1.89 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை மட்டுமே ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.