தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்தது

Petrol-Diesel Price cuts 2.50

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை, கடந்த 2017 ஜூன் மாதம் 16ம் தேதி கைவிடப்பட்டது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
Diesel Tax in Tamil Nadu

You May Like:ரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு

அந்த வகையில், தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.15க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.57க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே மும்பையை அடுத்து அதிக விலைக்கு பெட்ரோல், டீசலை விற்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு, 1.50 ரூபாய் குறைத்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களும், 1 ரூபாய் குறைத்துள்ளதை அடுத்து, பெட்ரோல், டீசல் மீதான விலை, லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பால் மத்திய அரசுக்கு, அடுத்தாண்டு மார்ச் வரையிலான காலத்தில், 10 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஒரு ஆண்டு காலத்தை கணக்கிட்டால், 21 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

You May Like:அறிமுகமானது டாட்சன் கோ மற்றும் கோ+ ஃபேஸ்லிஃப்ட்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைத்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளும், அதே அளவுக்கு குறைக்க வேண்டும்’ என, வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சி ஆளும், எட்டு மாநிலங்கள், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை, லிட்டருக்கு, தலா, 2.50 ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளன.இதையடுத்து, இந்த மாநிலங்களில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, லிட்டருக்கு, தலா, 5 ரூபாய் குறைந்துள்ளது.

குஜராத், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், அசாம் திரிபுரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் டீசலுக்கான விலையை மட்டும் குறைப்பதாக அறிவித்துள்ளன. ராஜஸ்தான், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள், அவற்றின் விலையை, தலா, 2 ரூபாய் குறைப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தன.
Petrol Price in Chennai

You May Like:பெட்ரோல் விலை ரூ100ஐ தொட்டால் ஏற்படும் புதிய பிரச்சினை?

மத்திய அரசு, 2014 நவ., – 2016, ஜன., வரை, ஒன்பது தவணைகளில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு, 11.77 ரூபாய்; டீசலுக்கு, 13.47 ரூபாய் வரை, கலால் வரி உயர்த்தப்பட்டது. கடந்த, 2017, அக்டோபரில், ஒரே ஒரு முறை, பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி, தலா, 2 ரூபாய் குறைக்கப்பட்டது; தற்போது, இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, 1 லிட்டர் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு, முறையே, 19.48 ரூபாய் மற்றும் 15.33 ரூபாய் கலால் வரி வசூலிக்கிறது. இவற்றுடன், மாநில அரசுகள், ‘வாட்’ எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை விதிக்கின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலையில், பாதி தொகை, வரியாக, மத்திய – மாநில அரசுகளுக்கு செல்கிறது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 1.50 ரூபாய் குறைப்பதாகவும், மேலும் 1 ரூபாயை பெட்ரோலிய நிறுவனங்கள் குறைக்கும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.

You May Like:ரியல்-டைம் கஸ்டமர் மானிட்டரிங் சேவையை தொடங்கியது ஓலா

சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையானது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.63 குறைந்தது. ஒரு லிட்டர் ரூ.84.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.79.79 -க்கு விற்பனை செய்யப்பட்ட டீசல் நேற்று ரூ.77.11-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல்-டீசல் விலையில் தலா ரூ.2.50 குறைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதை கருத்தில் கொண்டே விலை குறைப்பு செய்யப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.