புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் – டீசல் விலை

Petrol GST News in Tamil

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 56 காசுகளுக்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று பிரதமர் மோடி அறிவித்த பின் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் முறை அமலுக்கு வந்ததும் தினமும் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. இது கடந்த மே மாதம் மிக அதிக அளவில் உயர்த்தப்பட்டது.

Disel GST News in Tamil

You May Like:பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வர வாய்ப்பே இல்லை; மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

கர்நாடக தேர்தலுக்கு பின் ஒரே நாளில் 4 ரூபாய் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. அதன்பின்பும் பைசா கணக்கில் தினமும் உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல் தற்போது இமாலய விலையை அடைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் தினமும் உயரும் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பெட்ரோல் 2.98 ரூபாயும், டீசல் 3.57 ரூபாயும் உயர்ந்துள்ளது. பெட்ரோல்: ஆகஸ்ட் 1 – 79.26, ஆகஸ்ட் 10 – 80,13, ஆகஸ்ட் 15 – 80.14, ஆகஸ்ட் 25 – 80.69, ஆகஸ்ட் 31 – 81.58, செப்டம்பர் 3 – 82.24 ஆக உள்ளது. டீசல்: ஆகஸ்ட் 1 – 71.62, ஆகஸ்ட் 10 – 72.43, ஆகஸ்ட் 15 – 72.59, ஆகஸ்ட் 25 – 73.08, ஆகஸ்ட் 31 – 74.18, செப்டம்பர் 3 -75.19 ஆக உள்ளது.

தற்போது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 ரூபாய் 34 காசுகளாகும், டீசல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் 27 காசுகளாகும். இது மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

GST News in Tamil

You May Like:மஹிந்திரா மராஸ்ஸோ இந்தியாவில் அறிமுகமானது, விலை ரூ. 9.9 லட்சம்

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், வெளிநாட்டு பிரச்னைகள் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


தொடர்ந்து பேசிய அவர் எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு தூதரக ரீதியில் அழுத்தம் கொடுத்து அதன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் (லிட்டருக்கு):

புதிய விலை – ரூ. 82.34
பழைய விலை – ரூ.81.63
வித்தியாசம் – 71 காசுகள்

டீசல் (லிட்டருக்கு):

புதிய விலை – ரூ.75.27
பழைய விலை – ரூ.74.23
வித்தியாசம் – 1.04 காசுகள்