சென்னை: இன்றைய (21-12-2018) பெட்ரோல், டீசல் விலை முழு விவரம்

petrol-rate-chennai-21-12-2018

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை 73 ரூபாய் 11 காசுகளாகவும், டீசல் விலை 67 ரூபாய் 98 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை குறித்து தகவல்களை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள வருகின்றன. இந்நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கமாக போல் இன்று காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து லிட்டருக்கு 73.11 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு 67.98 காசுகளாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.