இந்தியாவில் விரைவில் ஸ்கோடா சூப்பர் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்

செக் கார் தயாரிப்பாளரான ஸ்கொடா ஆட்டோ நிறுவனம் ஸ்போர்ட்ஸ் வெர்சன் சூப்பர் கார்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்போர்ட்லைன், ஸ்கோடா வெப்சைட்டில் ஏற்கனவே, இந்த கார்கள் அறிமுகம் செய்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்கள், ஸ்போர்ட்ஸ் லூக் கொண்ட செடான் போன்று இருக்கும். நிறுவனத்தின் RS மாடல்கள், ஸ்போர்ட்ஸ் செடான் போன்று இருக்காது. இது உண்மையில் காஸ்மெட்டிக் வேலைகள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஜாலியாக டிரைவ் செய்யும் பழக்கங்களை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச மார்க்கெடில் கிடைக்கும் வாகனங்களை போன்றே, இந்தியாவில் வெளியாக உள்ள மாடல்களுக்கான ஸ்பெக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Like:செம்படம்பர் 1 முதல் கார், பைக்களின் விலை உயர உள்ளது ஏன் தெரியுமா?

இந்த காரின் உள்புறத்தில், கிளாஸி பிளாக் கலரில் முன்புற கிரில்கள், விண்டோ பிரேம்கள், ORVM கேப்ஸ், சைடு ஸ்டிரிப்கள், ரியர் பம்பர் மற்றும் ரியர் பகுதியில் இண்டகிரெட்டட் ஸ்பாயிலர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் ஸ்போர்ட்ஸ் தீம்களுடன் 18- (அன்ட்ரசிட்) அல்லது 19-அங்குல (மிதமிஞ்சிய கறுப்பு) அலாய் வீல்களை கொண்டது. இந்த காரை ஒட்டி செல்ல வசதியாகவும், 15mm அளவு கொண்ட குறைந்த சஸ்பென்சன்களுடன் வெளியாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


மேலும், லெதர் த்ரீ ஸ்போக்ஸ் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஸ்டியரிங் வீல் மற்றும் கியர் பாக்ஸ், ஸ்போர்ட்ஸ் சீட் மற்றும் தனித்துவமிக்க சீட் கவர்களை கொண்டுள்ளது. அலுமினியம் லுக் பெடல்கள் மற்றும் கார்பன் ஸ்டைல் டிரிம்கள், எலேக்ட்ரோனிக் மாறுபட்ட லாக்-கள், ஐரோப்பிய ஸ்பெக் கொண்ட இந்த கார்கள், XDS+ பங்க்ஷன் மற்றும் டிரைவிங் மோடு செலக்ட் செய்யும் வசதி அடப்டிவ் டைனமிக் சேஸ் கண்ட்ரோல், ஆகியவை ஆப்சனளாக உள்ளது. இந்தியாவில் வெளியாக உள்ள கார்களிலும் இதே ஸ்பெக் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Like:இ-வாகனங்களுக்கு ரூ.1.4 லட்ச வரை அரசு மானியம்; பெட்ரோல் கார்களின் விலை உயர வாய்ப்பு

பவர்டிரெயின்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஸ்கோடா இந்தியா தற்போது 1.8 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின்களுடன் 175bhp, 7-ஸ்பீட் கியர் பாக்ஸ் அல்லது 177bhp உடன் 6 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்சை ஆப்சனாக கொண்டுள்ளது. டீசல் கார்களை பொறுத்தவரை 2.0 லிட்டர் TDI இன்ஜின், இவை 175bhp மற்றும் 6-ஸ்பீட் DSG டிரான்ஸ்மிஷன் உடன் வெளியாகியுள்ளது. ஸ்போர்ட்ஸ்லைன் கார்களும் இதே கட்டமைப்பை கொண்டதாக இருக்கும்.

You May Like:2018 மாருதி சுஸுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் ரிவ்யூ

சூப்பர்ப் கார்ப்பரேட் எடிசன் வெளியிட்டப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பின்னர் இந்த சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன் கார்களின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சூப்பர்ப் கார்ப்பரேட் எடிசன் கார்கள் 23.49 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது (எக்ஸ் ஷோரூம்). இந்த கார்ப்பரேட் எடிட்ன் கார்கள், ஏற்கனவே ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வாகன் கார் உரிமையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இவை, ஸ்டைல் வைப்ரான்ட்களை விட 2.1 லட்ச ரூபாய் வரை குறைவாக உள்ளது. சூப்பர் கார்ப்பரேட் எடிசன் கார்கள், அழகிய மற்றும் ஸ்டைலான தோற்றத்தில் கிடைக்கிறது. இருந்த போதும், இந்த கார்கள் சாக்லேட் வெள்ளை நிற
ஆப்சனில் மட்டுமே கிடைக்கும்