BS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

BS IV vehicles

2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக BS IV வகை வாகனங்கள் 2020 ஏப்ரல் 1க்கு பிறகு விற்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

BS-IV vehicles

You May Like:புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பலரும் தங்களது சுற்றுப்புறத்தை பாதுகாப்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மக்களின் இந்த முயற்சியில் இந்திய அரசும் கைக்கோர்த்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுகுறைபாடில் வாகனங்களுக்கு அதிக பங்குள்ளது என்பதால், மாசுக்கட்டுபாடு கொண்ட பி.எஸ். 4 (Bharat Stage 4 norms) எஞ்சினை அனைத்து ரக வாகனங்களில் பொருதப்படவேண்டும் என மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் உத்தரவு பிறப்பித்தது.

SC ban,petrol vehicles

You May Like:வெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்

அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பு பெற்றிருந்தது.

பி.எஸ்.4 எஞ்சினின் செயல்குறையில் வாகனங்களிலிருந்து புகை வெளியேறுதல் மட்டுமல்லாமல், எரிவாயு டேங்குகளில் திரவங்கள் ஆவியாதலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எரிவாயுவிலிருந்து தீங்கு நிறைந்த நைட்ரஜன் வாயுவை நீக்க பி.எஸ். 4 மோட்டார் சைக்கிள்களில் அதிக திறன் படைத்த வினையூக்கி மாற்றிகள் (catalytic converters) தேவைப்படுகின்றன. அதேபோல சில வாகனங்களில் தீங்கு நிறைந்த நைட்ரஜனை வெளியேற்ற இயற்கை வாயுவும் (oxygen) தேவைப்படுகிறது.

air pollution

You May Like:இந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி

பெட்ரோல் பயன்பாட்டில் இயங்கும் எஞ்சின்கள் இந்தியாவில் எப்போதோ பி.எஸ். 4 தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு விட்டன. காரணம் பெட்ரோல் எஞ்சின்கள் உட்புற எரி (internal combustion) அமைப்பை கொண்டு இயங்குவதால். பெட்ரோல் எஞ்சின்கள் பி.எஸ்.4க்கு மாற்றப்படுவது எளிதானதாக இருந்தது.

பி.எஸ். 4 எஞ்சின் கொண்ட வாகனங்களை ஏற்கனவே மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மார்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களில் மின்னணு கட்டுப்பாட்டு அலகு பொருத்தப்படவுள்ளது. இதன்மூலம் வாகனத்தின் அனைத்து இயக்கங்களுக்கான அடிப்படைகளுமே மாற்றியமைக்கப்படும்

BS VI norms

You May Like:ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்

பி.எஸ். 4 எஞ்சின் கொண்ட கனரக வாகனங்கள் அனைத்திலும் வினையூக்கி மாற்றிகள் அல்லது டீசல் ஆக்ஸைடு கேட்டலிஸ்ட் (DOC) இடம்பெற்றிருக்கும். அதனால் மாசுகுறையாடு ஏற்படுவது தடுக்கப்பட்டும். இதுதவிர இன்னும் பெரியளவிலான கனரக வாகனங்களில் கண்டெயினர ஐரோப்பா நாடுகளில் நடைமுறையில் உள்ள தேர்ந்தெடுத்தக்கப்பட்ட வினையூக்கி தொழில்நுட்பம் (Selective Catalytic Reduction) இடம்பெறும். இதனாலும் கனரக வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

cleaner fuel

You May Like:ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்

இந்நிலையில் 2020 ம் ஆண்டு ஏப்ரல் 1 க்கு பிறகு பிஎஸ் 4 ( Bharat stage emission standards ) வகை வாகனங்களை விற்பனை செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 2020 ஏப்ரல் 1 க்கு பிறகு பிஎஸ் 4 வகை வாகனங்களை பதிவு செய்யவும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 4 வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், இனி எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.