டாட்டா அல்ட்ராஸ் EV-களின் விலை 10 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம் என தகவல்

2019 ஜெனிவா மோட்டார் ஷோவில், டாட்டா மோட்டார் நிறுவனம், தங்கள் நிறுவனம் உறுதியாக ஏற்று கொண்டுள்ள புதிய டெக்னாலஜிகளுடன் கூடிய முழுவதும் எலெக்ட்ரிக் முறையில் இயங்கும் இரண்டாவது வாகனமான அல்ட்ராஸ் EV-ஐ காட்சிபடுத்தியது. அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த கார்களை நமது மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதுடன், அலட்ராஸ் EV கார்களின் விலையை எதிர்பாராத விதமாக 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையாக நிர்ணயம் செய்ய உள்ளதாக தெரிகிறது.

அல்ட்ராஸ் EV-கள் அதிக விலை கொண்ட காரிகளில் ஒன்றாக இருக்கும் என்ற போதும், இந்த கார்கள் கவர்ந்த்திழுக்கும் ஸ்டைல், உயர்ந்த ஆற்றல் திறனுடன் வாடிக்கையாளர் விருப்பமாகவும் குறிப்பாக இளைய தலைமுறை வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருக்கும் என்று டாட்டா நிறுவனம் நம்புகிறது.

Tata Altroz EV Dashboard

You May Like:வெளியானது அடுத்த தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா

இதுகுறித்து பேசிய டாட்டா மோட்டார் நிறுவன எலக்ட்ரிக் மொபைலிட்டி பிசினஸ் & கார்ப்பரேட் ஸ்திரத்தன்மை தலைவர் ஷைலேஷ் சந்திரா, இந்த வகை கார்கள், அடுத்த 5-6 ஆண்டுகளில் 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமாகவே இருப்பதுடன், இந்த கார்களின் தேவையும் அதிகளவில் இருக்கும். அலட்ராஸ் EV களுடன் எங்கள் நோக்கமே, உறுதியான திறன்களுடன், வேறுபட்ட கேபின் அனுபவத்தை பிளாட் ஃப்ளோர் கட்டமைப்பு மற்றும் ப்ளோட்டிங் கன்சோல்களுடன் கொடுப்பதேயாகும். மேற்குறிய அனைத்தும் வழக்கமான IC இன்ஜின் கொண்ட வாகனங்களில் இருந்து மிகவும் வேறுபட்டு இருக்கும் என்றார்.

Tata Altroz EV

You May Like:ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 49.99 லட்சம்

அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கான்செப்ட்கள் அல்ட்ராஸ் ஹட்ச்பேக்களை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இவை தயாரிப்பு நிலையில் ஜெனிவாவில் காட்சி படுத்தப்பட்டது. இந்த கார்களை 250-300Km தூரம் பயணிக்கும் வகையிலும், இதன் சார்ஜிங் நேரத்தை 60min ஆகவும், பேட்டரியை மீண்டும் நிரப்பும் கால அளவு 80 சதவிகித திறன்களாகவும் இருக்க செய்ய கார் தயாரிப்பாளர்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.

இந்த காரின் விலை அடுத்த சில ஆண்டுகளில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், உலகளவிலான எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதை பொறுத்தே இந்த விலை குறிப்பும் இருக்கும். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைக்கும் என்றும், அதிகளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று சந்திரா நம்புகிறார்.

Tata Altroz EV Exterior

You May Like:2019 ஹோண்டா சிவிக் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 17.70 லட்சம்

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த கார்களின் பேட்டரி விலை தொடர்ச்சியாக குறையும், இதனால் இந்த கார்களை இயக்க ஆகும் செலவு மற்றும் பராமரிப்பு செலவுகளும் குறையும். இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இன்சென்டிவ்வை கொடுக்கும் என்றார். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த காரை குறிப்பிட்ட விலை அளவில் நவீன டெக்னாலஜி மற்றும் திறன்களுடன் வாங்க வசதியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Tata Altroz EV

You May Like:மாருதி சுஸுகி வேகன்ஆர் S-CNG ரூ. 4.84 லட்ச விலையில் அறிமுகமானது

மேலும் அவர் பேசுகையில், இந்த கார்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், இந்த கார்களுக்கான மானியத்தை FAME II ஸ்கீமில் உயர்த்தி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த காரை வாங்குபவர்களுக்கு இன்சென்டிவ்களும் கிடைக்கும். தனிப்பட்ட டிரான்ஸ்போர்ட்களுக்கும் இதே அளவிலான சலுகைகள் கிடைக்க வேண்டும் என்று அரசிடம் பேசி வருகிறோம். எங்கள் கோரிக்கையை அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப ஆண்டுதோறும் மாற்றியமைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.

பேஸ் II FAME இந்தியா திட்டத்திற்கான தீர்மானத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக, மூன்று ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட உள்ளது. இந்த ஸ்கீம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.