2019 ஜனவரி முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்ஸ்

Tata Motors to hike prices

டாட்டா மோட்டார் கார்கள் மற்றும் எஸ்யூவிகள் விலை, அந்த கார்கள் விற்பனை செய்யப்படும் சிட்டி மற்றும் மாடல்களை பொறுத்து 40 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வு வரும் 2019ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

டாட்டா மோட்டார் நிறுவனம், தங்கள் பயணிகள் வாகனக்களில் விலை 40 ஆயிரம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு மாடல்கள் மற்றும் அவை விற்பனை செய்யபபடும் சிட்டிகளை பொறுத்து மாறுபடும். புதிய விலை உயர்வு வரும் 2019ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

Tata Motors Car Price Hike

You May Like:ரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கார்களின் இன்புட் செலவுகள் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு போன்றவையே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று டாட்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து கார் தயாரிப்பாளர்களும் விலை உயர்வை அறிவித்துள்ளனர். ரெனால்ட், வோல்ஸ்வேகன் மற்றும் இசுசூ மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே விலை உயர்வை அறிவித்து விட்டன.

Tata Motors

You May Like:எந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இந்த விலை உயர்வு குறித்து பேசிய டாட்டா மோட்டார் நிறுவன் பயணிகள் வாகன பிசினஸ் யூனிட் தலைவர் மாயங்க் பரேக், மார்க்கெட்டிங் கண்டிஷன்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும், இன்புட் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பல்வேறு வகையாக பொருளாதார விஷயங்களை கருத்தில் கொண்டே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Price Hike for Tata Cars

You May Like:அறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மேலும் அவர் பேசுகையில், எங்கள் வளர்ச்சிக்கு ஏற்ப டைகோ, ஹெக்ஸா, டிகோர் மற்றும் நெகசான் கார்களில் வரும் ஆண்டுகளில் சில மேம்பாடுகளை செய்ய உள்ளோம். வரும் 2019ம் ஆண்டில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஹாரியர் கார்களை அறிமும் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஹாரியர் கார்கள் எங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்பதுடன் எங்கள் பிராண்டின் சிறப்புகளை உறுதி செய்தாக இருக்கும் என்றார்.

Tata Motors Cars Price Raise

You May Like:தொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

வரும் ஜனவரி மாதத்தில், டாட்டா ஹாரியர் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த கார்களுக்கான விலை 6 லட்சம் முதல் 20 லட்சம் வரை இருக்காலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Cars Price Increase

You May Like:டிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உண்மையில், இந்தாண்டு, நெகசான் கிராக்ஸ் எடிசன், ஹெக்ஸா டௌன்டவுன் ஹர்பன் எடிசன், டைகோ JTP, டைகோட் JTP மற்றும் 2018 டைகோர் போன்ற கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதே போன்று, 2019ம் ஆண்டிலும் டாட்டா நிறுவனம் சார்பில், பிரீமியம் ஹட்ச்பேக், கண்டேம்டு 45x போன்றவை இந்தாண்டின் இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.