டாட்டா நெக்ஸான் க்ராஸ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 7.14 லட்சம்

Tata Nexon Kraz Edition

சப்-காம்பேக்ட் எஸ்யூவிகளின் முதலாண்டு ஆண்டு விழாவை முன்னிட்டு விசுவல் ஹெட்லைட்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் மிட் வைப்ரண்டாக, டாட்டா நெக்ஸான் க்ராஸ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

tata nexon kraz edition launched in india dashboard

You May Like:2018 டாட்சன் ரெடி-கோ லிமிட்டெட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ 3.58 லட்சம்

டாட்டா மோட்டார் நிறுவனத்தின் முதல் ஆண்டு விழாவை முன்னிட்டு, தனது புதிய நெக்ஸான் க்ராஸ் லிமிட்டெட் எடிசன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, டாட்டா நெக்ஸான் க்ராஸ் எடிசன் கார்களின் விலையை பொறுத்தவரை பெட்ரோல் வகை கார்கள், 7.14 லட்ச ரூபாயில் இருந்தும், டீசல் வகை கார்கள் 8.07 லட்ச ரூபாயிலிருந்தும் தொடங்குகிறது. (அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த லிமிட்டெட் எடிசன் மாடல்களில் விசுவல் ஹெட்லைட்களுடன் கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த கார்களின் விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கார்கள், க்ராஸ் மற்றும் க்ராஸ்+ என இரண்டு வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. நெக்ஸான், ஆட்டோமொபைல் துறையில் முக்கிய பங்காற்றுவதுடன், டாட்டா நிறுவனத்தின் இரண்டாவது அதிகளவில் விற்பனையாகும் மாடலாக இருக்கும். சராசரியாக ஒவ்வொரு மாதமும் 4000 யூனிட்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாட்டா நெக்ஸான் க்ராஸ் கார்கள், 10 ஸ்டைலான ஹெட்லைட்களுடன், முழுவதும் புதிய TROMSO பிளாக் பெயிண்ட் ஸ்கீமில், கவரும் வகையிலான சோனிக்-சில்வர் டூயல் டோன் ரூப்களுடன் வெளியாகியுள்ளது. நியான் கிரீன் பெயியின்ட் ஸ்கீம்களுடன் ORVMs, பிராண்ட் க்ரில் இன்செர்ட்ஸ் மற்றும் வீல் கவர்களையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி க்ராஸ் பேட்ஜ்கள் டைல்கேட்-ல் பொருத்தப்பட்டுள்ளது. காரில் உள்பகுதியை பொறுத்த வரை, நியோ-கிரீன் வண்ணங்களில், ஏர்-வென்ட்களுடன், நியோ-கிரீன் சீட்கள், இவை க்ராஸ் வடிவில் தைக்கப்பட்டுள்ளது. மேலும் சீட் குஷன்கள் சென்ட்ரல் கண்ட்ரோல் பேட்ஜ் உடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டாஷ்போர்டு, பியானோ பிளாக் நிறத்தில், இதே நிறத்தில், டாஷ்போர்டு, டோர்கள், கன்சோல் மற்றும் ஸ்டீர்யரிங் டிசைன்களும் இடம் பெற்றுள்ளன.

tata nexon kraz edition launched in india audio

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


கூடுதலாக, லிமிட்டெட் எடிசன் டாட்டா நெக்ஸான் க்ராஸ் கார்களில், ஹர்மனில் இருந்து பெறப்பட்ட 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய இன்போடெய்ன்மென்ட் சிஸ்டம், ப்ளுடூத் டெலிபோனி, ஸ்டியரிங் மவுண்டாட் கண்ட்ரோல்கள், ஆட்டோமேடிக் காலநிலை கட்டுபாடுகளை கொண்டுள்ளது. இத்துடன் ரியர் ஏர் வென்ட்கள், எலெக்ட்ரிக்கள் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் மடங்கு தன்மை கொண்ட கன்னாடிகள், ரிவர் பார்க்கிக் சென்சார், மட்டி யுட்டிலிட்டி கிளவ்-பாக்ஸ் மற்றும் சென்டரல் கன்சோல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டோராஜ்களும் இதில் உள்ளது.

You May Like:மஹிந்திரா மராஸ்ஸோ இந்தியாவில் அறிமுகமானது, விலை ரூ. 9.9 லட்சம்

இந்த காரின் அறிமுக நிகழ்வில் பேசிய டாடா மோட்டார்ஸ் தலைவர் மாயங் பரேக், நாங்கள் முதல் ஆண்டு விழாவை கொண்டாடு வருகிறோம். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நெக்ஸான் க்ராஸ் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் ஸ்போர்ட்ஸ் லைப்ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது முதல் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

tata nexon kraz edition launched in india KRAZ

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


டாட்டா நெக்ஸான் க்ராஸ் கார்கள் 1.2 லிட்டர் ரேவோத்ரோன் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ரேவோத்ரோன் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு வகை கார்களும் 108bhp ஆற்றலை கொண்டிருக்கும். இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீட் மெனுவல் டிரான்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மல்டி டிரைவ் மோடில் விற்பனைக்கு வந்துள்ள இந்த காரில் கூடுதலாக இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கான உலகளாவிய NCAP விபத்து சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.