ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையில் புதிய சாதனை டாட்டா டியாகோ

Tata Tiago Sales August2018 Feature

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், டியாகோ கார் விற்பனை உயர்வுக்கு வடக்கு பிராந்தியங்களான சண்டிகர் டிரிசிட்டி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் நடந்த விற்பனையே காரணமாக அமைந்துள்ளது.

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஆட்டோகார் தயாரிப்பு நிறுவனமான டாட்டா நிறுவனம், தனது தயாரிப்பான டியாகோ கார்களின் விற்பனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த நிறுவனம், மொத்தமாக 9277 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது.
Tata Tiago Sales August2018 Front

You May Like:2019 வெஸ்பா ரேஞ்ச் அறிமுகம் செய்தது பியஜியோ; துவக்க விலை ரூ. 91,130

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், டியாகோ கார் விற்பனை உயர்வுக்கு வடக்கு பிராந்தியங்களான சண்டிகர் டிரிசிட்டி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் நடந்த விற்பனையே காரணமாக அமைந்துள்ளது.

You May Like:அறிமுகமானது 2018 அப்ரிலியா எஸ்ஆர்150; விலை ரூ. 70,031

டாப்-என்ட் டிரிம் – XZ வகைகளை அதிகளவில் விற்பனையாகியுள்ளது. இது பிராண்ட்டின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தெளிவாக விளக்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tata Tiago Sales August2018 Side2

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


இந்த விற்பனை உயர்வு குறித்து டாட்டா நிறுவனத்தின் பயணிகள் வாகனத்திற்கான பிசினஸ் யூனிட் மற்றும் மார்க்கெட்டிங் அண்ட் கஸ்டமர் சப்போர்ட் துணை தலைவர் எஸ்.என்.பர்மன் தெரிவிக்கையில், டியாகோ பிராண்ட்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவது, கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை உயர்வின் மூலம் உறுதியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 1.7 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னரும் தொடர்ந்து இந்த காரின் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இதே விற்பனை சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலான டியாகோ NRG கார்களுக்கும் தொடரும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம் என்றார்.
Tata Tiago Sales August2018 Side1

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


டியாகோ கார்கள், இம்பேக்ட் டிசைன் லாங்க்வேஜ்ஜில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் தயாரிப்பாகும். இந்த காரை வாங்கும் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள், 35 வயதுக்குட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். இதன் மூலம் இந்த கார்கள் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது தெரிகிறது. இதுமட்டுமின்றி, தற்போதைய மார்க்கெட் டிரெண்ட்களின்படி, பெட்ரோல் வகை கார்கள், மொத்த விற்பனையில் 80 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவே டியாகோ கார்களின் விற்பனை உயர்வுக்கும் காரணமாக இருந்துள்ளது.
Tata Tiago Sales August2018 Side

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஹாட்பேக் பிராண்ட்களை விரிவுபடுத்தும் நோக்கில், டாட்டா மோட்டார்ஸ், சமீபத்தில் டியாகோ NRG கார்களை அறிமுகம் செய்தது, இது நகர்ப்புறகளில் உள்ள கடினமான சாலைகளுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டது. இந்த காரை அறிமுகம் செய்யப்பட்டதும், நிறுவனம் புதிய பிரிவுக்குள் நுழைந்ததுடன், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிவு செய்ததது.

You May Like:ராஜ்புதன கஸ்டம்ஸ் ஸ்பெஷல் எடிசன்களாக இந்தியாவில் வெளியாகிறது டுகாட்டி மான்ஸ்டர் 797

தற்போது டியாகோ NRG கார்களின் பெட்ரோல் வகைகள் 5.49 லட்ச ரூபாய் விலையிலும், டீசல் வகைகள் 6.31 லட்ச ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலைகள் அனைத்தும் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்