பயணிகள் முன்னிலையில் தனது ஆசிரியரை கவுரவித்த துர்கிஷ் ஏர்லைன்ஸ் பைலட்; எமோஷனல் வீடியோ

Turkish Airline Pilot

மாணவர்களை நீண்டகாலம் சிறந்தவர்களாக இருக்க ஆசிரியர்களின் கல்வி அவர்களுக்கு மிகவும் உதவும். குழந்தை பருவம் முதல் எந்த வயதிலும் ஆசிரியர் நமக்கு சொல்லி கொடுப்பது நீங்காமல் மனதில் நீண்ட நாட்கள் நிற்கும். ஆனாலும், நாம் வளர்ந்த பிறகு அவர்களின் வாக்குபடி நடப்பதுடன் அவர்களுக்கு மரியாதை செலுத்துவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

துருக்கி ஏர்லைன்ஸ் பைலட் ஒருவர் தனது பள்ளி ஆசிரியரை மதித்து நடந்து கொண்டதுடன், அவருக்கு விமான பயணிகள் முன்னிலையில் மரியாதை செய்ய முடிவு செய்தார். இந்த மறக்க முடியாத நிகழ்வு குறித்து ஆசிரியர் உட்பட பயணிகள் அனைவருக்கும் உள்ளூர் மொழியில் மெசேஜ் அனுப்பினர்.

You May Like:இந்தியாவில் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ் சுள்ளினான்; விலை ரூ. 6.95 கோடி

பின்னர் விமான ஊழியர்களுடன் இணைந்து அழகிய மலர்கள் நிறைந்த போக்கே ஒன்றை பயணிகள் முன்னிலையில் தனது பள்ளி ஆசிரியருக்கு பரிசளித்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

கீழே உள்ள வீடியோவை பாருங்கள்

தனது பள்ளி ஆசிரியரை கவுரவித்த விமான பைலட் எழுதிய மெசேஜ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மரியாதைக்குரிய பயணிகள், உங்கள் கேப்டன் பேசுகிறேன். இன்று ஒரு முக்கியமான தினம். இங்கு மிகவும் முக்கியமான பயணி ஒருவர் உங்களுடன் உள்ளார்.

You May Like:ரூ. 1.11 கோடி விலையில் அறிமுகமானது ஜாகுவார் XJ50

அவர் எனது ஆசிரியர் என்னை பைலட்டாக மாற்றியவர், இவர் 20 ஆண்டுகளாக கேப்டனாக இருந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்/பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் எனக்கு மட்டுமின்றி என்னை போன்று பல கேப்டன்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளார்.

எனது கேப்டன், எனது ஆசிரியர் சாதிக் ஒனூர். உங்கள் அனைவரின் முன்பு அவரை கவுரவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நாளில் துருக்கி விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் அவரை வாழ்த்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

என்னை போன்று அனைவரும் உங்கள் ஆசிரியர்களை கவுரவித்து மகிழ்விக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.