ஜனவரி 2019 தொடக்கத்தில் வரப்போகும் புதிய கார்கள் என்னென்ன?

2019 January Car Launches

கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான அறிமுகங்களை, கார் மார்க்கெட்கள் சந்தித்துள்ளன என்பது 2018ம் ஆண்டு முழுவதையும் பார்க்கும் போது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, தயாரிப்பாளர்களும் தங்கள் பங்குக்கு ஆப்பர்களை வெளியிட்டனர். தற்போது 2019ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார்களுக்கான அறிவிப்புகள் தொடர்ச்சியாக வர தொடங்கி விட்டன. இதில் ஹாட்ச்பேக், இரண்டு மிட்-சைஸ் எஸ்யூவிகள், என்ட்ரி-லெவல் ஆடம்பர வசதி கொண்ட செடான், ஒரு ஆடம்பர வசதி கொண்ட எம்விபி மற்றும் முழுமையான மாற்றங்களுடன் ஏழு-சீட் கொண்ட ஆடம்பர எஸ்யூவி ஒன்றும் அறிமுகமாகிறது.

வரும் 23ல் வெளியாகிறது மாருதி சுசூகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R)

வெளியேறும் மாடல்களை போன்று, இந்த கார்களும் கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது, (2003,2006, 2010 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டது) முற்றிலும் புதிய வேகன் ஆர் கார்கள், வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது. புதிய பெரிய மனிதர்களுக்கான ஹாட்ச்பேக்கள் அதிக வளைவான லூக் மற்றும் பெரியளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

இந்த காரில் அதிகரிக்கப்பட்ட நீளம் எதிர்பார்க்கப்பட்டது போன்று பின்புறத்தில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கால்களை வைத்து கொள்ள அதிக இட வசதியுடன் பின்புற சீட்கள் அதிக வசதியாக இருக்கும். புதிய மாடல்கள் பழைய வேகன் ஆர், கார்களுக்கான பிளாட்பார்மிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. அல்பேட் அப்டேட்களுடன் இந்திய கிரஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்டே இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மூன்று சிலிண்டர், 1.0 லிட்டர் இன்ஜின்கள் இந்த காரிலும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்துடன், (பெட்ரோல் மற்றும் CNG வகைகள்) 5-ஸ்பீட் மெனுவல் மற்றும் AMT ஆப்சன்களும் கிடைக்கும் என்று தெரிகிறது. உயர்ந்த ஸ்பெக் வகைகள் வெளியாகும் புதிய வேகன் ஆர் கார்களில் ஸ்மார்ட்பிளே டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் வழக்கமாக மாருதி காரில் இடம் பெறுவது போன்றே பொருத்தப்பட்டிருக்கும். இந்த் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டால் ஹூண்டாய் சாண்ட்ரோ, டாட்டா டியோகோ மற்றும் அதன் சொந்த நிறுவன காரான மாருதி சுசூகி செலீரியா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Tata-Harrier-in-Orange

வரும் 23ல் அறிமுகமாகிறது டாட்டா ஹாரியர் (Tata Harrier)

அதிக எதிர்பார்க்கப்பட்ட கார்களில் ஒன்றாக இந்த டாட்டா ஹாரியர் இருந்து வருகிறது. இந்த காரின் விலை 16-21 லட்ச ரூபாயாக (ஆன்-ரோடு விலை) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கார்கள் ஹூண்டாய் கிரட்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்

இந்த கார்கள் அறிமுகமாகும் போது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அல்லது AWD போன்றவை இருக்காது. இவை லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களுக்கான பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு வீல் டிரைவ் கொண்ட இந்த கார்கள் ஆப்-ரோடுகளுக்கான திறனையும் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

140hp, 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் (ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் என்று பெறப்பட்ட) மூன்று டிரைவிங் மோடுகளை கொண்டிருக்கும். அதாவது, எக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று மோடுகளை கொண்டிருக்கும். சிறந்த ஸ்டைல், அதிக இடவசதியுடன் கூடிய உள்கட்டமைப்பு, ஆடம்பரமான கேபின் மற்றும் பாதுகாப்பு கிட் போன்றவற்றை இந்த காரை அதிக மக்கள் விரும்ப காரணமாக இருந்து வருகிறது. தற்போது டாட்டா நிறுவனம் இந்த காரின் விலை அறிவிப்பு மூலம் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்த முடியும்.

Toyota Camry

வரும் 18ல் வெளியாகிறது டொயோட்டா கேம்ரி (Toyota Camry)

முற்றிலும் புதிய கேம்ரி கார்கள் வரும் 18ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இது ஹைபிரிட் தோற்றத்தில் மட்டுமே வெளியாக உள்ளது. தற்போது வெளியே செல்லும் மாடலை ஒப்பிடும்போது, புதிய மாடல்களின் பெட்ரோல்-எலக்ட்ரிக் பவர்டிரெயின்கள் மேம்படுத்தப்பட்டு மொத்தமாக 208hp (இதில்176hp/221Nm ஆற்றல் பெட்ரோல் இன்ஜின்கள் மூலமும் 118hp ஆற்றல் எலட்ரிக் இன்ஜின்கள் மூலமும்) ஆற்றலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எட்டாம் தலைமுறை கேம்ரி கார்கள், லெக்ஸஸ் ES 300h கார்களுக்கு அடித்தளமாக அமைந்த பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய டொயோட்டா மாடலை, பழைய மாடலுடன் ஒப்பிடும் போது, அளவில் பெரியதாகவும், அதிக இடவசதிக் கொண்டதாகவும் இருக்கும்.

புதிய என்ட்ரி லெவல் ஆடம்பர செடான்கள் மறுடிசைன் செய்யப்பட்டு கவர்ந்திழுக்கும் தோற்றத்தில், அதிக வசதிகளுடன் வெளியாக உள்ளது. இந்த காரின் கேபினில் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், 10 இன்ச் அளவு கொண்ட ஹெட்அப் டிஸ்பிளே மற்றும் 7.0 இன்ச் அளவு கொண்ட மல்டி இன்பர்மேஷன் டிஸ்பிளே இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த அரசு துறையான FAME (ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக ஏற்றுதல் மற்றும் உற்பத்தி) சர்ச்சையாக கூறும் ஹைபர் நிலையில் உள்ளது. டொயோட்டோவின் புதிய போட்டியாளர் ஸ்கோடா சூப்பர்ர்ப், வோக்ஸ்வாகன் பாசட் மற்றும் ஹோண்டா அக்கார்டு கார்களுக்கு இந்த கார்கள் போட்டியாக இருக்கும். இந்த கார்களின் விலை 39 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம் விலை ) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mercedes C200 Progressive

வரும் 24ல் அறிமுகாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் V- கிளாஸ் (Mercedes-Benz V-class)

மெர்சிடைஸ் நிறுவனம் மீண்டும் பிரிமியம் ஆடம்பர MPV வகைகளில் தனது V-கிளாஸ் அறிமுகம் மூலம் நுழைய உள்ளது. தற்போதைய தலை முறை மாடல், கடந்த 2014ல் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டவையாகும். இந்த கார்கள் ஸ்பெயினில் இருந்து CBU போன்று இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த கார்களின் விற்பனையை பொறுத்து, உள்ளூர் அசெம்ப்ளி குறித்த நடவடிக்கைகளுக்கு மெர்சிடைஸ் நிறுவனம் பரிந்துரைக்கும். இந்த ஸ்பெக் மாடல்கள் 5140mm மற்றும் 5370mm என இரண்டு நீளங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6 மற்றும் 8 சீட் கான்பிகேரேஷ்னில் வெளியாகலாம்.

இந்த MPVகள் BS-VI கம்பிளைன்ட் வெர்சன்களாகவும், 2.2 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின்களுடனும், இவை 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கார்கள் 75-80 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BMW X7

வரும் 31ல் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூ X7 (BMW X7)

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய X7 கார்கள் இந்தியாவில் முதல் முறையாக உயர்தரம் கொண்ட M50d வகையாக அறிமுகமாக உள்ளது. இந்த கார்களின் உத்தேசித்த விலை 1.6 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தெரிகிறது. இந்த X7 கார்கள் சர்வதேச அறிமுகமாகி இரண்டு மாதங்களுக்கு பின்னர் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த கார்கள் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்சலில் நடந்த ஆட்டோ ஷோவில் காட்சிபடுத்தப்பட்டது

X7 M50D கார்கள் குவாட் டர்போசார்ஜ்டு, 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின்களுடன் 400hp மற்றும் பெரியளவிலான 760Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும். பிஎம்டபிள்யூ நிறுவனம் முதலில் உயர்தரம் கொண்ட வகைகளை அதாவது xடிரைவ்40i (340hp, 3.0 லிட்டர் பெட்ரோல்) மற்றும் xடிரைவ் 30d (265hp, 3.0 லிட்டர் டீசல்) கார்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் CKD ரூட் வழியாக இந்தியாவுக்கு வர உள்ளது.

மேற்குறிய அனைத்து இன்ஜின்களும் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், இவை ஆற்றலை நான்கு வீல்களுக்கு அளிக்கும். ஆப் ரோடு பேக்கேஜ்கள் நான்கு சர்பேஸ் மோடுகளுடன் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் X7 கார்களின் சீட்டின் குறித்து வெளியான தகவல் உறுதியாக தெரியவில்லை என்ற போதும் 6 மற்றும் 7 சீட் கொண்ட வகையாக இருக்கும் என்று தெரிகிறது. கேபினை பொறுத்தவரை X5 போன்றே, 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் டிஸ்பிளே, நான்கு மண்டல கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், சாப்ட் குளோஸ் டோர், முன்று பீஸ் கிளாஸ் கொண்ட சன் ரூப், பார்க் அசிஸ்டென்ட் பங்ஷன்களுடன் ரிவர்ஸ் கேமரா தமரும் பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும்.

Nissan Kicks SUV features

நிசான் கிக்ஸ் (Nissan Kicks)

இந்த கார்க்ளுகான புக்கிங் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த கார்கள் புதிய ரெனால்ட் கேப்டூர், ஹூண்டாய் கிரட்டா மற்றும் மாருதி சுசூகி எஸ்-கிராஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்திய ஸ்பெக் கிக்ஸ் கார்கள், சர்வதேச ஸ்பெக் கார்களை விட பெரியகதாக இருக்கும். இந்த கார்கள் ஜப்பான் பிராண்ட் M0 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது (இந்த பிளாட்பார்மில் கேப்டர் மற்றும் டெர்ரனோ கார்கள் உருவாக்கப்பட்டன). சர்வதேச மாடல்கள் V பிளாட்பாரம் அடிப்படையில் உருவாக்கப்பட்டன.

இந்த கார்கள் போட்டியாக காராக இருக்கும். நிசான் நிறுவனம் முதல் முறையாக 360 டிகிரி சுற்றும் தன்மை கொண்ட கேமராக்களை கொண்டிருக்கும். கூடுதலாக இதில், 8.0 இன்ச் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 17 இன்ச் அலாய் வீல்கள், LED புரொஜெக்டர் ஹெத்லம் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் போன்றவைகளை பெற்றிருக்கும். இந்த காரின் இன்ஜின் டிரான்ஸ்மிஷன் ஆப்சன்கள் தற்போது, ரெனால்ட் கேப்சர் கார்களை போன்று இருக்கும். இதில் 106hp, 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டர் மற்றும் 110hp, 1.5 லிட்டர் K9K டீசல் இன்ஜின், இவைகள் முறையே 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.