வோல்க்ஸ்வேகன் அமினோ கார்ப்பரேட் எடிசன் அறிமுகமானது; விலை ரூ.6.99 லட்சம்

Volkswagen Ameo Corporate Edition Launched

வோல்க்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் சிறப்பு எடிசன்களாக அமினோ சப்-காம்பேட் செடான்களுடன் அமினோ கார்ப்பரேட் எடிசன் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்த கார்கள் கார்ப்பரேட் மற்றும் பிசினஸ் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று வோல்க்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கார்கள் ஹைளின் பிளஸ் வகையாக மட்டுமே, அமினோ கார்ப்பரேட் எடிசன்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்களின் அறிமுக விலையாக பெட்ரோல் இன்ஜின் மெனுவல் டிரான்ஸ்மிஷன்களுடனும் 6.99 லட்ச ரூபாய் விலையிலும், டீசல் இன்ஜின் விலை 7.99 லட்ச ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்).

You May Like:ஃபோர்ஸ் குர்கா ஏபிஎஸ் ரூ.11.05 லட்ச விலையில் அறிமுகமானது

வோல்க்ஸ்வேகன் அமினோ கார்ப்பரேட் எடிசன்கள் பல்வேறு வசதிகளுடன் ஏற்கனவே உள்ள ஹைலைன் பிளஸ் வகையாக வெளியாகியுள்ளது. இந்த கார்கள் லாபிஸ் ப்ளூ, ரீபிலிக்ஸ் சில்வர், கேண்டி ஒயிட், டாஃப்பி பிரவுன் மற்றும் கார்பன் ஸ்டீல், வோல்க்ஸ்வேகன் அமினோ அனைத்து வகைகளும் டூயல் பிரான்ட் ஏர் பேக்ஸ்களுடன், ABS வசதிகளுடன் கிடைக்கிறது.

அமினோ கார்களில் இடம் பெற்றுள்ள வசதிகளாக, குரூஸ் கண்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர்களுடன் ஸ்டாடிக் கார்னிங் லைட்களுடன் டைனமிக் டச்ஸ்கிரீன் மல்டிமீடியா மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் ஆப்கனெக்ட், ஆட்டோ ஏர்கண்டிஷன் சிஸ்டம்களுடன் இருக்கும்.

You May Like:மாருதி சுசூகி ஆல்டோ K10 மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியானது; விலை ரூ. 3.65 லட்சம்

வோக்ஸ்வாகன் பயணிகள் கார்கள் பிரிவு இயக்குனர் ஸ்டெஃபென் நாப் தெரிவிக்கையில், இந்த கார்கள் இந்தியாவுக்காகவும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. அமினோ கார்லைன்கள் குறிப்பாக இந்திய மார்க்கெட்டுகாகவே மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மன் இஞ்சினியரிங் வசதிகளுடன் கூடிய இந்த காம்பேக்ட் கார்கள் பல்வேறு முன்னணி வசதிகளை பொருத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. அமினோ கார்ப்பரேட் எடிசன்களுக்காக, நாங்கள் சர்வதேச தரத்துடன் கூடிய பாதுகாப்பு மற்றும் தரம் கொண்ட காராகவும், விளையாட்டு டிரைவிங் அனுபவத்தை அளிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.