வோக்ஸ்வாகன் போலோ, அமீயோ, வெண்டோ பிளாக் அண்ட் ஒயிட் எடிசன் அறிமுகமானது

Volkswagen Black And White Edition

வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் ஸ்பெஷலாக ‘பிளாக் மற்றும் ஒயிட்’ எடிசன்களில் போலோ, அமீயோ, வெண்டோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பிளாக் அண்ட் ஒயிட் எடிசன் கார்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வோக்ஸ்வாகன் பிராண்ட் டீலர்ஷிப்களில் கிடைக்கும் என்றும், இந்த எடிசனை எந்த வித கூடுதல் கட்டணமின்றி வாடிக்கையாளர் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக் அண்ட் ஒயிட் பேக்கேஜ்களின் ஒரு பகுதியாக, அனைத்து மாடல்களிலும் பாடி கிராப்பிக்ஸ், பிளாக் அண்ட் ஒயிட் கலரிலான லெதர் மூலம் கவர் செய்யப்பட்ட சீட் கவர்கள், ரியர் ஸ்பாயிலர், 16 இன்ச் போர்ட்கோ அலாய் வீல்கள், பிளாக் பெயிண்ட் ரூப், பிளாக் ORVMகள் மற்றும் பிளாக் அண்ட் ஒயிட் குரோம் பேட்ஜ்களுடன் முன்புற பெண்டர்களும் உள்ளன. இதுதவிர போலோ மற்றும் வெண்டா மாடலில்களில் டீப் பிளாக் கலருடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Volkswagen Vento

You May Like:2019 ரெனால்ட் கேப்சர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியானது

இன்ஜின்களை பொருத்தவரை, அனைத்து மாடல்களிலும் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ டீசல் யூனிட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், 90hp ஆற்றலுடன் போலோ ஹாட்ச்பேக்கிலும், 5-ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடனும் இணைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், 110hp ஆற்றல் கொண்ட இன்ஜின், அமீயோ, வெண்டோ செடான்களில் பொருத்தப்பட்டுள்ளதோடு, இந்த இன்ஜின் 5-ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

You May Like:பிஎம்டபிள்யூ 503i எம் ஸ்போர்ட் ரூ.59.20 லட்ச விலையில் அறிமுகமானது

போலோ மற்றும் அமீயோ கார்களில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் 76hp மற்றும் 95Nm டார்க் உடன் இயங்குவதுடன், இந்த இன்ஜின்கள் 5 ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. வெண்டோ கார்களில் பெரியளவிலான 1.6 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மோட்டர்களுடன், 105hp மற்றும் 153Nm டார்க் ஆற்றலுடன், 5 ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்களுடன் கூடிய போலோ மற்றும் வெண்டோ கார்கள் 105hp மற்றும் 175Nm ஆற்றலுடன் 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கார்களுக்கான போட்டியை பொருத்தவரை, வோக்ஸ்வாகன் போலோ, மாருதி சுசூகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் i10 மற்றும் ஃபோர்டு ஃபிகோ கார்களுக்கும், அமீயோ வகைகள் மாருதி சுசூகி டிசைர், ஹூண்டாய் எக்சென்ட் மற்றும் ஃபோர்டு ஆஸ்பியர் கார்களுக்கும், வெண்டோ வகைகள் ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசூகி சியாஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களுக்கும் போட்டியாக இருக்கும்.