விழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது

Volkswagen Connect

விழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது.

வோக்ஸ்வாகன் கனெக்ட் அசிஸ்டென்ட் அப்ளிகேஷன்கள் மூலம் தகவல்கள் பதிவு செய்ய முடியும், மேலும் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் பல்வேறு புதிய வசதிகளையும் கொண்டுள்ளது. வோக்ஸ்வாகன் வென்டோ கார்களிலும், கூடுதல் பாதுகாப்புக்காக முன்புறமாக ஏர்பேக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

You May Like:SWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்

வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் இந்த விழாக்கால சீசனில், புதிதாக கனெக்ட் எடிசன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கார்களை வெளியிட்டுள்ளது. வோக்ஸ்வாகன் கனெக்ட் என்பது, சிறந்த திறன் கொண்ட வாகன அசிஸ்டென்ட் சிஸ்டமாகும். இது வாடிக்கையாளர்களை பல்வேறு தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும், வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீோ கனெக்ட் எடிசன்களிலும், புதிய லாபிஸ் ப்ளூ பெயின்ட் ஸ்கீம் உள்பட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கனெக்ட் எடிசன்களுக்காக எந்தவிதமான அதிக கட்டணமும் வசூல் செய்யப்படாது என்று வோக்ஸ்வாகன் நிறுவனம் அறிவித்துள்ளது.

வோக்ஸ்வாகன் கனெக்ட் அசிஸ்டென்ட் சிஸ்டம், பயனாளார்களை தங்கள் ஸ்மார்ட்போன்களை பிளாக் அண்ட் பிளே டாங்கிள் மூலம் எளிதாக கனெக்ட் செய்து கொள்ள உதவும். இந்த டாங்கிள், ஆன்போர்டு டையோகின்ஸ் போர்டு மற்றும் ப்ளுடூத் வழியாகவும் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

You May Like:ரூ 3.38 லட்ச விலையில் அறிமுகமானது 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்

வோக்ஸ்வாகன் கனெக்ட் எடிசன் குறித்து பேசிய வோக்ஸ்வாகன் பயணிகள் கார் துறை இயக்குனர் ஸ்டெஃபென் நாப், வோக்ஸ்வாகன் டிரான்ஸ்பார்மேஷன் முழுவதுமாக வாகனங்களில் பொருத்தி கொள்ளும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், வோக்ஸ்வாகன் கனெக்ட் மற்றும் சமீபத்தில் ‘டிஜிட்டல் ஒர்க் பிளேஸ்’ அனுபவத்தை கொடுக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையிலான அனுபவத்தை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வோக்ஸ்வாகன் கனெக்ட், வாடிக்கையாளர்களுக்கு தேவையான டிரைவிங் பிகேவியரை ஆய்வு செய்யும், டிரிப் டிராகிங், பெட்ரோல் காஸ்ட் மானிட்டரிங் மற்றும் பல்வேறு வசதிகளை விரல் நுனியில் கொண்டு வந்து சேர்க்கிறது என்றார்.

You May Like:அறிமுகமானது 2018 டாடா டிகோர் ஃபேஸ்லிப்ட்; விலை ரூ. 5.20 லட்சம்

கூடுதலாக, புதிய கலர் ஆப்சன்களுடன், வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள், டாங்கிள் மூலம் கனெக்ட் செய்யும் வசதி கொண்டது. மேலும் இதில், 16 இன்ச் கிரே புரோடகோ அலாய் வீல்கள், லெதர் சீட் கவர்கள், அலுமினியம் பேடல்கள் மற்றும் கார்பன் பினிஷ் ORVMsகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கனெக்ட் எடிசன்கள் கிளாஸ்களுடன் கூடிய ரூப் மற்றும் சைடு ஃபாயில், குரோம் பேட்ஜ் கனெக்ட்கள் ஃபெண்டர்களில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீோ கார்கள் மூன் ஸ்டோன் கலர்களுடன், ரோடியோ சரவுண்டாட் டிரிம், குளோபாக்ஸ் லைட், ரியர் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் பல வசதிகளை கொண்டுள்ளது.

வோக்ஸ்வாகன் வென்டோ கார்களிலும் மேம்படுத்தப்பட்ட டூயல் பிராண்ட்சைட் ஏர்பேக்ஸ், மிகவும் மேம்படுத்துப்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் எதிர்கால செடான்களுக்கு ஏற்ற வகையில், புதிய 15 இன்ச் டைமண்ட் கட் ஆல்ஸ்டார் அலாய்கள், ஹைலைன் டிரிம் மற்றும் பாடி மலரில் ரியர் ஸ்பாயிலர் ஆகியவைகளும் பொருத்தப்பட்டுள்ளது.

You May Like:ரூ. 2.19 கோடி விலையில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63

இந்த புதிய புதிய வசதிகள் குறித்து பேசிய ஸ்டெஃபென் நாப், வோக்ஸ்வாகன் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மையமாக பிசினஸ் செய்து வருகிறது. இதுமட்டுமின்றி எங்கள் நிறுவனத்தின் பிரபலமான கார்லைன்கள், புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகள், அதாவது டூயல் பிராண்ட்-சைடு ஏர்பேக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது வெண்டோ கார்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். இதுபோன்ற தனித்துவம் மிக்க வசதிகள், வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச அளவிலான சேவைகளை வழங்கும்.

வோக்ஸ்வாகன் போலோ கார்கள் 5.55 முதல் 9.39 லட்ச ரூபாயிலும், அமீோ கார்கள் 5.65 மற்றும் 9.99 லட்ச ரூபாய்க்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை வந்துள்ளது. வோக்ஸ்வாகன் வென்டோ கார்கள் 8.83 லட்ச ரூபாயில் தொடங்கில் 14.02 ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது (அனைத்து விலைகளுக்கும் எக்ஸ் ஷோ ரூம் விலை). மேற்குறிய மூன்று மாடல்களுக்கு, இந்தியாவில் உள்ள 104 நகரங்களில் உள்ள வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் 121 டீலர்ஷீப்களில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.