பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Petrol-Diesel Price cuts 2.50

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைவில் 100 ரூபாயை எட்டி விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் பெட்ரோல் 21 ரூபாயாகவும், டீசல் 23 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த காலங்களை விட மிக உச்சநிலை என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எப்போது தொடங்கியது?

கடந்த 9 ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால், கச்சா எண்ணெயில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் இந்தியச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர மட்டுமே செய்திருக்கிறது.

கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 8610 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 55.04 ரூபாய்.

அதே ஜூன் 28ம் தேதி 2017 அன்று கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 3,026 ரூபாய் மட்டுமே. ஆனால், 2017 ஜூன் 28ம் தேதி மும்பைச் சந்தியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 78.44 ரூபாய். இன்றைய சூழ்நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Diesel Tax in Tamil Nadu

You May Like:வெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்

இதில் நாம் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம், இந்த காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ஒரே அளவில் மிகச்சிறிய மாற்றங்களுக்கு மட்டுமே உட்பட்டு அப்படியே இருந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் கச்சா எண்ணெயின் விலை இரண்டு மடங்கு குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல் விலை பாதியளவு உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 2010ம் ஆண்டு ஜூன் முதல் பெட்ரோல் விலையையும், 2014ம் ஆண்டு அக்டோபர் முதல் டீசல் விலையையும் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் நிறுவனங்களே மாற்றிக்கொள்ளலாம் என விதி தளர்த்தப்பட்டது. ஆனால், இதன் பிறகு மிக அதிகமாக வளர்ச்சி கண்டது தனியார் நிறுவனங்கள் தான்.

குறிப்பாக, கடந்த 2017 ஜூன் 16 முதல் தினம் தோறும் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த அறிவிப்பிற்கு பிறகு கண் துடைப்பு நடவடிக்கையாக முதல் 13 நாட்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை 3.45 குறைக்கப்பட்டது. அதன்பிறகாக மெல்ல விலை அதிகரிக்கப்பட்ட விலை கடந்த ஜூன் 28 முதல் இன்றுவரை சுமார் 5.63 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

You May Like:இந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி

இதே காலகட்டத்தில் இந்திய பெட்ரோலிய பொருட்கள் விநியோகத்துறையில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியன் ஆயில் 5%, பாரத் பெட்ரோலியம் 9%, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 7.4% அளவு விற்பனை குறைந்துள்ளது. இந்த மூன்று அரசு நிறுவனங்கள் மட்டுமே ஒட்டுமொத்த இந்திய பெட்ரோலிய விற்பனைச் சந்தையில் சுமார் 95% சந்தையைக் கட்டுபடுத்தி வந்தன. தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு சுமார் 4% என்கிற அளவில் இருந்தது.

ஆனால், கடந்த ஓராண்டில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு சதவீதம் தடலாடியாக உயர்ந்து ஒட்டுமொத்த சந்தையில் 12% பெட்ரோலியப் பொருட்களை தனியார் நிறுவனங்கள் மட்டும் கட்டுப்படுத்த துவங்கியுள்ளன.

குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம் 400 புதிய பெட்ரோல் பங்குகளையும், எஸ்ஸார் நிறுவனம் 1000 பெட்ரோல் பங்குகளையும் திறந்துள்ளது. உலகில் பெட்ரோலியத் தேவை உலக அளவில் 3% என்கிற அலவில் உயர்ந்துள்ள போது இந்தியாவில் அது 8%க்கும் அதிகமாக உள்ளது.

இவ்வளவு வேகமாக அதிகரிக்கும் பெட்ரோலியத் தேவை அரசின் கைகளை விட்டு தனியார் ஆதிக்கத்துக்கு சென்று வருகின்றன. தினம் தினம் விலையேற்றி வரும் பெட்ரோலிய நிறுவனங்களின் லாபம் பெருமளவுக்கு தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்லத் துவங்கியுள்ளது.

Petrol Price in Chennai

You May Like:ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்

தினமும் பெட்ரோல் விலை நிர்ணய முறை எப்போது தொடங்கியது?

கடந்தாண்டு ஜூலை 15ம் தேதி முதல், பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகளின் கலால் வரியும் கடந்த காலங்களை விட அதிகளவு உயர்த்தப்பட்டதன் விளைவாக ஏற்றத்தை தவிர்க்க முடியாமல் திணறி வருகின்றனர். வழக்கமாக ஆண்டுக்கு பெட்ரோல், டீசல் விலை 5 முதல் 7 ரூபாய் வரை அதிகரித்திருக்கும். ஆனால், கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து நடப்பு மாதம் வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 23 ரூபாயும் அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

தினமும் உயர்ந்து வரும் இந்த விலை உயர்வால் மக்களின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு எரிபொருள் மீதான கலால் வரி குறைத்தது. அதன் மூலம் பெட்ரோ, டீசல் விலையில் ரூ. 2.50 குறைந்தது. ஆனால் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரித்து மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதுமட்டுமன்றி பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் என்பது கவனிக்கத்தக்கது.

You May Like:மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான தீர்வு ?

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இந்த விலை உயர்வில் இருந்து தப்பிக்க எலக்ட்ரிக் கார்கள் மற்றும் பைக்குகளை பயன்படுத்துவே சிறந்த முறை என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையை பார்க்கும் போது, கண்டிப்பாக இதற்கு மாற்றாக ஏதாவது ஒன்று தேவை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தவது குறித்த கருத்துகளை ஏற்று கொள்ள மக்கள் தயாராகி வருவதாகவே தெரிகிறது.