ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்குமா? வாகன ஓட்டிகள் கேள்வி

Petrol-Diesel Price cuts 2.50

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.29 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.14 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து 73.29 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து 68.14 காசுகளாகவும் உள்ளது.

Diesel Tax in Tamil Nadu

You May Like:ரூ. 5,000 செலுத்தி ஐ-ப்ரைஸ்-களுக்கான ப்ரீ புக்கிங் செய்து கொள்ளலாம்: ஓகினாவா அறிவிப்பு

எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக சரக்கு லாரி கட்டணம் உயர்ந்தது. ஷேர் ஆட்டோ கட்டணமும் அதிகரித்தது.

You May Like:பயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி

இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு தலா 2 ரூபாய் 50 காசு குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து விலையை உயர்த்திய இந்திய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் கடந்த அக்டோபர் 17ம் தேதியில் இருந்து விலையை குறைத்தன. இது வாகன ஓட்டிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட 5 மாநில தேர்தலையொட்டித்தான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தபோது பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டதை போல தற்போதும் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விடுமோ என்ற அச்சம் வாகன ஓட்டிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Petrol Price in Chennai

You May Like:ரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ்

அதேசமயம் பெட்ரோல், டீசல் விலையை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொருத்து எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்வதால் 5 மாநில தேர்தல் முடிவுக்கும் பெட்ரோல், டீசல் விலைக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த பத்து நாட்கள் சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

You May Like:தொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்

தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு மாற்றம்

டிசம்பர் 18, 2018 ரூ.73.29 +0.10
டிசம்பர் 17, 2018 ரூ.73.19 +0.20
டிசம்பர் 16, 2018 ரூ.72.99 0.00
டிசம்பர் 15, 2018 ரூ.72.99 +0.05
டிசம்பர் 14, 2018 ரூ.72.94 0.00
டிசம்பர் 13, 2018 ரூ.72.94 +0.12
டிசம்பர் 12, 2018 ரூ.72.82 0.00
டிசம்பர் 11, 2018 ரூ.72.82 -0.10
டிசம்பர் 10, 2018 ரூ.72.92 -0.26
டிசம்பர் 09, 2018 ரூ.73.18 -0.15

petrol price in chennai