வெளியானது 2019 ட்ரையம்ப் ராக்கெட் III டிஎஃப்சி

Rocket III

ட்ரையம்ப் மோட்டர் சைக்கிள்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய பீஸ்போக் லிமிடெட் எடிசன் ரேஞ்ச் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கள் ட்ரையம்ப் தொழிற்சாலை கஸ்டம் ரேஞ்ச் (TFC) பைக் என்று அழைக்கப்படுகிறது. இந்த பைக்கின் முதல் மாடல் மேம்படுத்தப்பட்டதுடன், முற்றிலும் புதிய 2019 ட்ரையம்ப் ராக்கெட் III டிஎஃப்சி என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

டிஎஃப்சி ராக்கெட் III பைக்களின் கான்செப்ட்கள் வெளியாகியுள்ள நிலையில், ட்ரையம்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டிஎஃப்சி ராக்கெட் III இரண்டாவது ரேஞ்ச் மாடல்களின் முழு விபரம் வரும் மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Triumph Rocket III TFC

You May Like:புதிய 2019 கேடிஎம் RC 200 ABS அறிமுகம்; விலை ரூ 1.88 லட்சம்

2019 ட்ரையம்ப் ராக்கெட் III டிஎஃப்சி பைக்கள், முழுமையாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாடுகள் முற்றிலும் புதிய இன்ஜின், மேம்படுத்தப்பட்ட சைக்கிள் பாகங்கள் மற்றும் புதிய பாடி ஓர்க் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

2019 ட்ரையம்ப் ராக்கெட் III பைக்களில், சிங்கிள் சைட் கொண்ட ஸ்விங்ஆர்ம் மற்றும் பெரியளவிலான 2,50cc இன்ஜின் போன்றவைகளை கொண்டதாக இருக்கும்.

Triumph Rocket III

You May Like:மெர்சிடிஸ்-பென்ஸ் V- கிளாஸ் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 68.40 லட்சம்

2019 ட்ரையம்ப் ராக்கெட் III பைக்களில் புதிய சேஸ்களுடன் புதிய சிங்கிள் சைடு ஸ்விங்ஆர்ம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெர்சன்களுடன் 2.3 லிட்டர் நீள்சதுர வடிவிலான டிரிபிள் இன்ஜின்களுடன், ட்ரையம்ப் ராக்கெட் III பைக்கள் 2004-ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் 2019-ல் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிக டிஸ்பிளேஸ்மென்ட் கொண்டதாகவும், 2,500cc வரை ஆற்றலுடனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி இந்த இன்ஜின்கள் 180bhp மற்றும் 230Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Triumph Bikes

You May Like:2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது

டிஎஃப்சி ராக்கெட் III பைக் கான்செப்ட்களை விளக்கியபோதும், தயாரிப்பு வெர்சன் கீழே கொடுக்கப்பட்டவைகள் போன்றே இருக்கும். புதிய 3-1-3 எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம், இரண்டாம் தலைமுறை TFT இன்ஸ்டுரூமென்ட் பேனல் (ஒருவேளை இவை ஸ்கிராம்ப்ளர் 1200-இலிருந்து பெறப்படலாம்) மற்றும் ப்ரேம்போவில் இருந்து பெறப்படும் உயர்தரம் கொண்ட பிரேக்கள் போன்றவற்றை கொண்டதாக இருக்கும்.

ட்ரையம்ப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட கஸ்டம் ரேஞ்ச் பைக்கள் இந்தியாவில் அறிமுகபடுத்தப்பட போதில்லை என்ற போதிலும், தயாரிப்பு மாடல் ராக்கெட் III டிஎஃப்சி பைக்கள் 2019ம் ஆண்டின் கடைசியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rocket III

You May Like:2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில் இன்று அறிமுகமானது

2019 ட்ரையம்ப் ராக்கெட் III டிஎஃப்சி பைக்கள், ஸ்டாண்டர்ட், டூரிங் என இரண்டு வகைகளை வெளியாக உள்ளது. ஸ்டாண்டர்ட் வகை, ஒரே சீட் கொண்டிருப்பதுடன் அதிக உபகரணங்கள் கொண்டதாக இருக்கும். டூரிங் எடிசன் வகை, மாறுபடும் ரியர் சப்பிரேம், பெரிய ஸ்கிரீன் மற்றும் ஆடம்பரமான சீட் கொண்டதாக இருக்கும். இந்த பைக்கின் தயாரிப்பு வெர்சன் இந்தியாவில் 2019ம் ஆண்டின் கடைசியில் அறிமுகமாக உள்ளது.