ரூ. 1.02 லட்ச விலையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் அவெஞ்சர் 220 ஏபிஎஸ்

bajaj avenger 220 abs street

விரைவில் அமலுக்கு வர உள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் தனது தயாரிப்புகளில் பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது. 125cc திறன் கொண்ட டூவிலர்களில் ABS பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. ஏற்கனவே ABS வெர்சன் பஜாஜ் அவெஞ்சர் பைக்கள், டீலர்ஷிப்களின் ஸ்டாகியார்டுகளில் இருப்பது தெரிய வந்துள்ளதுடன், இந்த பைக்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக மார்க்கெட்டுக்கு வர உள்ளது. ACI அறிக்கையின்படி, புதிதாக விற்பனைக்கு வர உள்ள பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளின் விலை 1.02 லட்ச ரூபாயாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

bajaj avenger 220 abs

You May Like:2019இல் வெளிவர உள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கள்

பஜாஜ் அவெஞ்சர் 220 ஏபிஎஸ் பைக்கள், தற்போது ஸ்ட்ரீட் 220 மற்றும் குரூஸ் 220 என இரண்டு வகைகளில் கிடைக்க உள்ளது. கூடுதலாக ABS கள் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த பைக்களின் விலை 6,700 ரூபாய் அதிகமாக இருக்கும். இரண்டு வகை பஜாஜ் அவெஞ்சர் 220 பைக்களும், சிங்கிள்-சேனல் ABS மற்றும் பல்சர் 200 NS மற்றும் பல்சர் RS 200 பைக்களை போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 125cc டூவிலர்களில் ABS பொருத்துவது கட்டாயமாக்கும் சட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், பஜாஜ் நிறுவனம், ABS உபகரணங்களுடன் கூடிய பைக்களை இதற்கு முன்பே அறிமுகம் செய்ய உள்ளது.

You May Like:வரும் பிப்ரவரியில் அறிமுகமாகிறது பெனெல்லி TRK 502, 502 X

இதுவரை பஜாஜ் அவெஞ்சர் 220 பைக்கள் இன்னும் டீலர்ஷிப்களை சென்றடையவில்லை என்றபோதும், டெலிவரிக்கு தயாராகவும், விரைவில் ஷோரூம்களை வந்தைடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனம், பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் அறிமுகம் குறித்த விபரங்களை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் ABS அல்லாத வகை பஜாஜ் அவெஞ்சர் பைக்களை தொடர்ந்து தயாரித்து, புதிய சட்ட விதிகள் அமலுக்கு வரும் வரை விற்பனை செய்யுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கூடுதலாக ABS பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அதிக விலை கொண்டதாக இருப்பதால், இந்த பைக்களின் விற்பனை மார்ஜின் பாதிக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்நிலையில், சில டீலர்ஷிப்கள் பஜாஜ் அவெஞ்சர் 220 ABS வகைகளுக்கான புக்கிங்கை தொடங்கியுள்ளன.

You May Like:https://www.autonews360.com/bike-news-tamil/jawa-jawa-forty-two-launched-with-rear-disc-dual-channel-abs-details-on-prices-bookings-and-deliveries/

பஜாஜ் அவெஞ்சர் 220 பைக்களில் ABS இணைப்பு தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த பைக்களை வெளிப்புறமாக பார்க்கையிலும், மெக்கானிக்கல் ரீதியாகவும் எந்த மாற்றமும் இல்லாமலே உள்ளது. இரண்டு வகை பஜாஜ் அவெஞ்சர் பைக்களும், 220cc, சிங்கிள் சிலிண்டர், ஆயில்-கூல்டு இன்ஜின்களுடன் அதிகபட்ச ஆற்றலான 19 BHP-ல் 8,400 rpm-லும், பீக் டார்க்யூவான 17.5Nm-ல் 7,000rpm-லும் இயங்கும். இந்த இன்ஜின் 5-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

You May Like:ரூ. 1.52 லட்ச ரூபாயில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் ஏபிஎஸ்

பஜாஜ் அவெஞ்சர் பைக்கள் நீண்ட நாளாக மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட பைக் ஆகும். இதற்கு முன்பு 150cc, 180cc மற்றும் 220cc வெர்சன்கள் வெளியானது. கடந்த ஆண்டு பஜாஜ் நிறுவனம் 150cc பைக்களின் தயாரிப்பை நிறுத்தி விட்டது. தற்போது 180cc மற்றும் 220cc இன்ஜின் கொண்ட பைக்கள் மட்டுமே விற்பனை கிடைக்கிறது. 180cc வகைகள் ஸ்ட்ரீட் வகையாக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்ட்ரீட் வெர்சன் அவெஞ்சர் பைக்கள், அலாய் வீல்கள் மற்றும் சிறிய முன்புற ஃப்ரிங்கை கொண்டிருக்கும், இதில் குரூஸ் வெர்சன்கள் நீண்ட தூர பயணம் செய்பவர்களுக்கு உகந்ததாக இருக்கும். அவெஞ்சர் குரூஸ் வெர்சன்கள் ஸ்போக்ஸ் கொண்ட ரிம் மற்றும் பெரிய விசர் கொண்டிருக்கும். இருந்தபோதும், டவுன்சைடு ஸ்போக்ஸ் ரிம்களை கொண்ட டயர்கள், டியூப்லெஸ் டயர்கள் போன்று இருக்காது.

bajaj avenger 220 abs ex-showroom price in chennai

You May Like:ரூ. 13.74 லட்சத்தில் அறிமுகமானது 2019 சுசூகி ஹயபுசா

இந்திய மார்க்கெட்டில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக்கள் சுசூகி இண்ட்ரூடர் 155 பைக்களுக்கு போட்டியாக இருக்கும். சுசூகி ஏற்கனவே ABS ஆப்சன்களுடன் இண்ட்ரூடர் பைக்களை இந்திய மார்க்கெடில் அறிமுகம் செய்துள்ளதோடு, இந்த பைக்கள் 1.02 லட்ச விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை புனேவில்) விற்பனை செய்யப்படுகிறது.