2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் லேண்ட்மார்க் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது விலை ரூ.53.77 லட்ச ரூபாய்

Land Rover Discovery Sport Landmark Edition Launched

2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் லேண்ட்மார்க் எடிசனை அறிமுகம் செய்துள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. 53.77 லட்ச ரூபாயில் விற்பனைக்கு வந்துள்ள புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் கார்கள் புதிய டிசைன் தீம் உடன் பல்வேறு காஸ்மடிக் மாற்றம் மற்றும் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Land Rover Discovery Sport Landmark Edition

You May Like:2019 மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் விலை விபரங்கள் வெளியானது

இந்த எஸ்யூவிகள் தற்போது புதிய கார்பதியன் கிரே காண்டிராஸ்ட் ரூப், டைனமிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் பம்பர்களுடன் பல்வேறு வசதிகளுடன் வெளியாகியுள்ளது. லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் லேண்ட்மார்க் எடிசன்கள், நார்விக் பிளாக், யூலொங் ஒயிட் மற்றும் காரிஸ் கிரே என மூன்று எக்ஸ்டீரியர் கலர் ஆப்சன்களில் வெளியாகியுள்ளது.

Land Rover Discovery Sport Launch

You May Like:மெர்சிடிஸ்-பென்ஸ் V- கிளாஸ் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 68.40 லட்சம்

புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் லேண்ட்மார்க் எடிசன் கார்களின் அறிமுகம் குறித்து பேசிய ஜாகுவார் லாண்ட் ரோவர் இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் & மேனேஜிங் டைரக்டர் ரோஹித் சூரி, 2019 மாடல் டிஸ்கவரி ஸ்போர்ட் லேண்ட்மார்க் எடிசன் கார்களை டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் போர்ட்ஃபோலியோவில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு எடிசன் வகைகள் குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. இவை இந்த வாகனத்தின் செயல்திறன், அட்வென்சர் திறன் மற்றும் ஸ்பிரிட்களை அதிகரிக்கும் வகையில் இருக்கும்.

Land Rover Discovery Sport On Road Price in Chennai

You May Like:2019 புதிய டாட்டா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்ச விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது

மற்ற வசதிகளாக முன்புறம், புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் லேண்ட்மார்க் எடிசன்களில், ஸ்போர்ட்ஸ் மற்றும் டைனமிக் முன்புற பம்பர்களுடன் கிராபைட் அட்லாஸ் எக்ஸ்டீரியர் அசன்ட்கள் மற்றும் 18 இன்ச் டூவின் 5 ஸ்போக் 511 அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வீல்கள் கிளாஸ் டார்க் கிரே கலரில், ரூப்-க்கு மேட்சிங் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Land Rover Discovery Sport Ex-Show room Price in Chennai

You May Like:2019 புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் ரூ. 4.19 லட்ச விலையில் இன்று அறிமுகமானது

இந்த வாகனத்தின் இன்டீரியரில், எபோனி லெதர் சீட்களுடன், எபோனி ஹெட்லைனர்கள், டார்க் கிரே அலுமினியம் பினிஷர்களுடன் சென்டர் ஸ்டாக்கை சுற்றி இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் எடிசன் டிஸ்கவரி ஸ்போர்ட் கார்கள், 2.0 லிட்டர் இக்ஜினியம் டீசல் இன்ஜின்களுடன் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்கள் அதிகபட்சமாக 177bhp மற்றும் பீக் டார்க்யூவில் 430Nm டார்க்யூ கொண்டிருக்கும் வகையில் டுயூன் செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கம்போல இந்த மோட்டார் 9-ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.